கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
சென்னை, ஆக. 6 - தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் வியா ழக்கிழமை (ஆக. 7) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை யை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 7 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகு திகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணா மலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.