tamilnadu

img

உலகின் முதல் சூரிய சக்தி கார் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய உலகின் முதல் கார் சரியில் லாத சாலைகளிலும் நீண்ட  தூரம் தடையில்லாமல் ஓடும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த மின்னேற்றம் (recharging) செய்யாமல் ஸ்டெல்லா டெரா (Stella Terra) என்று  பெயரிடப்பட்டுள்ள இந்த கார் மொராக்கோ மற்றும் சஹாராவின் குறுக்கே 620 மைல்/1,000 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனை புரிந்துள்ளது.

சோதனை ஓட்டம்

இரண்டு இருக்கைகல் உள்ள  இந்த கார் நெதர்லாந்து ஐன்ட்ஹோவன்  (Eindhoven ) தொழில்நுட்பக் கழக மாண வர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சவாலான வெவ்வேறு வகை சாலை களில் அதன் குறைந்த எடை மற்றும் காற்று இயக்க வடிவமைப்புகளை (aerodynamic profiles) சோதித்துப் பார்த்து தன் கன்னி ஓட்டத்தை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது. மேற்கூரை யில் பொருத்தப்பட்டுள்ள பல அடுக்கு சூரிய மின் பலகைகள் மூலம் சூரிய ஆற்றலைப் பெறும் இது மணிக்கு 90 மைல் அல்லது 145 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் பெற்றது.

இன்றே பத்தாண்டுக்கு பின்பு வரக்கூடிய தொழில்நுட்பம்

இதன் எடை 1,200 கிலோகிராம் அல்லது 1.2 டன் மட்டுமே. நல்ல சூரிய  ஒளி இருக்கும் நாளில் 440 மைல் அல்லது 740 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும்  ஆற்றல் உடையது. இந்த காரின் குறை வான எடை, உயர் திறனுள்ள சூரிய மின் பலகைகள் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகு வரக்கூடிய வாகன மாதிரியை இன்றே பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது என்று ஐன்ஹோவன் சூரிய மின் திட்ட ஆய்வுக்குழுவின் (Solar team) மேலாளர் விஸ் பாஸ் (Wisse Bos) கூறு கிறார்.

சிறப்பு அம்சங்கள்

மோசமான சாலைகளில் கூட தன்  உயர் திறனை இழக்காமல் எடை குறை வாக இருந்தாலும் சூரியனிடம் இருந்து சக்தியைப் பெற்று ஓடும் திறனை ஸ்டெல்லா டெரா பெற்றுள்ளது. இந்த வாகனத்தில் அமைக்கப்பட் டுள்ள சுருள்கள், மற்றும் பிற பகுதி களில் இருந்து ஏற்படும் அதிர்வுகளில் இருந்து வாகனத்தைப் பாதுகாக்கும் திறன் (suspension), சூரிய மின் பலகை களுடன் பொருத்தப்பட்டுள்ள ஆற்றல் சேமிப்புக் கலன்கள் (inverters) போன் றவை இதன் சிறப்பம்சங்கள்.

காருக்கு உள்ளே இருந்துகொண்டு சமையல்

இதன் மூலம் தொழில்நுட்பத்தின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள லித்தி யம் அயனி மின்கலன் (Lythium ion  battery) சூரிய ஒளி குறைவாக இருக்கும்  நாட்களிலும் கூட வாகனத்தைக் குறைந்த தூரம் ஓட உதவுகிறது. சமைக்க,  போன், புகைப்படக்கருவி போன்ற உப கரணங்களுக்கான மின்சாரத்தை வாக னத்தில் சேமிக்கப்பட்டுள்ள சூரிய சக்தியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தங்கள் படிப்பில் ஓராண்டு விடுப்பு எடுத்து 21-25 வயது வரையுள்ள 22  மாணவர்கள் இணைந்து காரை வடிவ மைத்துள்ளனர்.

தடைகளைத் தாண்டி

“வட ஆப்பிரிக்காவில் டாங்கியெர் (Tangier) முதல் சஹாரா வரை உள்ள கடினமான சாலைகளில் தன் ஒன்றரை வார ஆரம்ப கட்ட சோதனை ஓட்டத்  தின்போது ஆலிவ் பசுமை நிறமுடைய ஸ்டெல்லாவி ஸ்டீயரிங் செயல்முறை பழுதடைந்தது. ஆனால் இது விரைவில் சரிசெய்யப்பட்டது. லேண்ட் ரோவர் (Land Rover), பி எம்  டபிள்யூ (BMW) போன்ற வாகன உற்பத்தி யாளர்கள் இதன் வடிவமைப்பை மேம்படுத்தி மேலும் நீடித்த நிலையான  பயன்பாடுடைய வகையில் தயாரிக்க முடியும் என்று 24 வயதான ஸ்டெல்லா திட்டத்தின் தொழில்நுட்ப மேலாளர் பாஃப் வேன் ஜிங்க்கள் (Bob van Ginkel) கூறுகிறார். 

வாகனத்தின் மாடல்

முன்பு திட்டமிடப்பட்டதை விட இப்போது ஸ்டெல்லா டெரா காரே இது  வரை வடிவமைக்கப்பட்டவற்றில் மிகச்சிறந்த செயல்திறனை பெற்றுள்ள மாடல். இதில் பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்டுள்ள ஆற்றலை மாற்றும் கருவி (bespoke converter) 97% செயல்திறனுடன் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது. இதனால் இது மோசமான சாலைகளில் வசதி யாக ஓட்டிச்செல்லக்கூடியதாக விளங்கு கிறது. மேலும் குறைவான எடை மற்றும்  சாலையில் இடை நிற்காமல் செல்லும்  ஆற்றல் போன்றவை இதன் தனிச் சிறப்புகள்.

சவால்கள்

இன்று சந்தையில் உள்ள சூரிய மின் பலகைகள் 45% செயல்திறனை மட்டுமே பெற்றுள்ளன. மற்றவை சுமார் 15 முதல் 20% திறனுடையவையாக மட்  டுமே உள்ளன. “சந்தைக்கு செல்வதற்கு முன் வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் மாடலை இறுதி செய்ய இன்னும் பல பணிகள் முடிக்கப்படவேண்டியுள்ளன. இந்த மாதிரி முழுமை பெறும்போது வாகன உற்பத்தியாளர்கள் இதைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்ட முடியும். இந்த வகை கார்களை வடிவமைக்க சூரிய மின் பலகைகள் பொருத்த பெரிய  இடம் தேவைப்படுகிறது. நீண்ட தூரம்  நிற்காமல் பயணிக்கும் சூரிய மின் சக்தி  வாகனங்களை உற்பத்தி செய்ய அதிக  ஆற்றலுடைய மின் பலகைகள் உரு வாக்கப்பட வேண்டும். இதற்கு அதிக  செலவாகிறது” என்று 21 வயதான திட்ட நிதி மேலாளர் ப்ரிட் வேன்ஹல்ஸ்ட் (Britt van Hulst) கூறுகிறார்.

முந்தைய முயற்சிகள்

உலகின் முதல் வெற்றிகரமான சூரிய  ஆற்றலால் ஓடும் காரை உருவாக்கி யுள்ள ஸ்டெல்லா டெரா ஆய்வுக்குழு வினர் இலாப நோக்குடன் இதனை  தயாரிக்கவில்லை. நன்கொடையா ளர்களின் நிதியைக் கொண்டே இது  நிறைவேற்றப்பட்டுள்ளது. நெதர் லாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் லைட் இயர் (Lightyear) நிறுவனத்தின் கிளை நிறுவனமான அட்லஸ் (Atlas) தொழில்நுட்ப நிறு வனம் 2022ல் 500,000 ஈரோ விலையில் இத்தகைய காரை உற்பத்தி செய்ய முயன்றது.

புதிய மாடலுடன்
 

ஆனால் போதுமான அளவு ஆர்டர்கள் கிடைக்காததால் இந்த நிறு வனம் திவாலா ஆனது. என்றாலும் இந்நிறுவனம் இப்போது 40,000 டாலர்  விலையில் மின்னேற்றம் செய்யப்படு வதற்கு இடையில் சுமார் 500 மைல் பய ணம் செய்யும் வசதியுடைய ஒரு புதிய  மாடலுடன் சூரிய சக்தி காரை தயா ரிக்க முன்வந்துள்ளது. இது போன்ற  புதிய முயற்சிகள் வெற்றிபெறும்போது பூமியும் இங்கு வாழும் உயிரினங்களும் சூழல் சீரழிவால் ஏற்பட்டுக்கொண்டி ருக்கும் பேரழிவுகளில் இருந்து காப் பாற்றப்படும் என்பது உறுதி.