tamilnadu

img

கீரிக்கும் பாம்புக்கும் சண்டை - யே.மாமா

“ஏன்டா தருண், எதுக்கு எப்பப் பார்த்தாலும் கீரியும் பாம்பும் போல நீயும் பாலாவும் சண்டை  போட்டுக்கிட்டே இருக்கீங்க,” என்று கேட்டார் அம்மா.  அவனுடைய முகத்தில் படர்ந்திருந்த வியர்வையைப் பூத்துண்டால் துடைத்துவிட்டார். அவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது  என்பதற்கு மாறாக, அந்தக் “கீரியும் பாம்பும்  போல” என்ற உவமையைப் பற்றித்தான் யோசித் தான் அவன். அந்த இரண்டு விலங்குகளும் எதிரி கள், பாம்பைக் கீரி கடித்துக் குதறும், கீரியின் உடலைப் பாம்பு சுற்றிக்கொண்டு வலிக்க வலிக்க  இறுக்கிக் கொத்தும் என்றெல்லாம் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ‘யார் கீரி, யார் பாம்பு? விளையாடப் போற இடத்துல பாலா எனக்குப் பிடிக்காத மாதிரி ஏதாச்  சும் சொல்றான், என்னை வம்புக்கு இழுக்கிற மாதிரி எதையாச்சும் செய்யிறான். அதனாலதான் சண்டை வருது. அவன் அப்படிச் செய்யிறப்ப நான் சும்மா இருப்பேனாக்கும். அவன் பாம்புன்னா  நான் கீரிதான்,’ என்று தனக்குத் தானே சொல்லிக்  கொண்டான் தருண்.‘ஆனா விளையாட முடி யாமப் போகுதே,’ என்று மனதில் குடியேறிய ஒருவிதமான குழப்பத்துடன் தூங்கிப்போனான். காலையில் கண் விழித்தபோது அவனுக்குப் படுக்கையை விட்டு எழ வேண்டும் என்ற எண்ணமே  ஏற்படவில்லை. அன்றைக்குப் பள்ளி விடுமுறை என்ற காரணத்தோடு, விளையாடப் போனால் மறுபடியும் சண்டை வரலாம் என்ற காரணமும் சேர்ந்துகொண்டது. அதனால்படுத்தே கிடந்தான். அப்புறம் வீடியோ கேம்ஸ் விளையாடினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா, “வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதே. வெளியே போய் சுத்திட்டு வா,” என்றார்.

ஒரு திட்டமும் இல்லாமல் புறப்பட்டான் தருண்.  தெருவைக் கடந்தான். உறவினர்களின் வீடு களைக் கடந்தான். கிரிக்கெட் விளையாடுகிற திறந்தவெளியைக் கடந்தான். அந்த ஊரின் கடற்கரையாகிய கண்மாயைக் கடந்தான். குளுகுளுவெனத் தழுவிய காற்றை அனு பவித்தபடி கண்மாயைக் கடந்து தோப்புக்குள் நுழைந்தான். பலவகைச் செடிகளும் மரங்களு மாக ஒரு குட்டிக் காடு போலக் காட்சியளித்தது  தோப்பு. அந்தப் பசுமை அழகை ரசித்துக் கொண்டே நடந்தவன் ஒரு பாறையின் அருகில் வந்தபோதுஅசந்துபோய் நின்றுவிட்டான். அங்கே ஒரு கீரியும் ஒரு பாம்பும் ஒன்றை யொன்று துரத்திசுற்றிச்சுற்றி வந்துகொண்டி ருந்தன. நிச்சயம் அங்கே உக்கிரமான சண்டை நடக்கும் என்று ஊகித்த தருண், அந்தப் பாறை யின் மேல் ஏறி அமர்ந்துகொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்கத் தயாரானான். அதன் பிறகு நடந்ததை அவனால் நம்பவே முடியவில்லை. கீரியும்  பாம்பும் ஓடுவதை நிறுத்தின.கீரி தன் வாயால் பாம்பைக் கவ்வித் தூக்கிப் போட்டது. ஆனால் பாம்பின் உடலில் அதன் பற்கள் படவே இலலை. திரும்பி வந்த பாம்பு கீரியைச் சுற்றி வளைத்தது. ஆனால் கீரியின் உடலை அது இறுக்கவே இல்லை. இப்படியே சிறிது நேரம் போன பிறகுதான் அவன் ஒன்றைக் கவனித்தான். கீரி, பாம்பு இரண்டின் முகங்களிலும் கோபம் இல்லை, ஆனால் சிரிப்பு இருந்தது. அப்போதுதான் அவனுக்குப்  புரிந்தது அந்த இரண்டும் விளையாடிக் கொண்டிருந்தன என்று. எதிரிகளான கீரியும் பாம்பும் விளையாடு வதாவது? சிறிது நேரத்தில் கீரி சோர்வடைந்தது போல ஒரு மரத்தடியில் படுத்தது. அங்கே கிடந்த  ஓரிரண்டு கூர்மையான கற்களை பாம்பு வாயால்  கவ்வியெடுத்து வேறு பக்கம் போட்டது. அதன்  பிறகு கீரியின் தோளில் தன் தலையை வைத்துக்  கொண்டது.

‘என்னடா இது ஒரே புதிரா இருக்கு!’ வியப்பைக் கட்டுப்படுத்த முடியாதவனாக தருண்  அந்த மரத்தடிக்குச் சென்றான். படுத்திருந்த இரண்டும் தலைகளைத் தூக்கி அவனைப் பார்த்தன. “கீரிக்கும் பாம்புக்கும் ஆகாதுன்னு சொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போடுவீங்கன்னு பார்த்தா, இப்படி ஜாலியா விளையாடிக்கிட்டு இருக்கீங்களே! எப்படி?” தருண் இப்படிக் கேட்டதும் இரண்டும் வாய்விட்டுச் சிரித்தன. “எப்படி சண்டை வரும்?  நாங்க ரெண்டு பேரும்தான் நண்பர்களா யிட்டோமே…“ என்றது கீரி. அதன் தோளை அனைத்துக்கொண்டு தலையை ஆட்டியது பாம்பு. புதிருக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியோடும், மனதின் குழப்பத்திற்குத் தீர்வு கிடைத்த தெளி வோடும் தோப்பிலிருந்து திரும்பிய தருண் நேராக  பாலா வீட்டுக்குச் சென்றான்.