tamilnadu

img

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏன்? - சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏன்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ஒன்றிய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”அஞ்சல் சேவை பிரிவு 2 துறைத் தேர்வுகள் 29.11.2020 இல் நடத்தப்பட்டது. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தால் முதலில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பின்னர் கேரள உயர்நீதி மன்றத்தால் நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தாலும் (எஸ்.எல். பி 5030/2022) 04.03.2022 அன்று உறுதி செய்யப்பட்டு 3 வாரங்களுக்குள்ளாக அமலாக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

*உச்சநீதிமன்ற தீர்ப்பு*

Image

இதில் 2000 தேர்வர்கள் உள்ளனர் என்றும், தேர்வு முடிவுகள் தாமதமாவதால் 100 அஞ்சல் மாவட்டங்களில் மக்கள் சேவை பாதிக்கப்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் உச்சபட்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் ஏன் தாமதம்?” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*ஒன்றிய அமைச்சருக்கு எழுதிய கடிதம்*

Image

;