tamilnadu

img

வெண்புள்ளிகள் நோய் விழிப்புணர்வு மாணவர் சந்திப்பு இயக்கம்

மதுரை, நவ.29-  வெண்புள்ளிகள்  நோயல்ல, பிறருக்கு தொற்றாது  என்ற விழிப்புணர்வு பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை  உருவாக்க மாணவர்கள் சந்திப்பு இயக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்  கம் இந்தியா ஆகிய அமைப்புகளின் சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  வெண் புள்ளிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா அமைப்பின் அகில இந்திய செய லாளர்  கே உமாபதி, வெண்புள்ளிகள் குறித்து உரையாற்றி னார். பின்னர் மாணவர்கள்  உறுதிமொழி எடுத்தனர்,  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் நாராயண சாமி ,மாநில துணைத்தலைவர் முத்துலட்சுமி, துளிர் அறி வியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  காமேஷ் மற்றும்  மாவட்டத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் கலந்து  கொண்டனர், பின்னர் மாலையில்   சி இ ஓ ஏ மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற  விழிப்புணர்வு பிரச்சா ரத்தில் பள்ளியின் நிறுவனத் தலைவர் ராஜா கிளைமாக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;