tamilnadu

img

ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்குப் புறம்பானது!

சிசிடிவி, புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார் டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை, அக். 27 - ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவ காரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகை யில் சிசிடிவி - புகைப்பட ஆதா ரங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ளார். முன்னதாக டிஜிபி சங்கர் ஜிவால்,  வியாழக்கிழமையன்றே விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி  ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பா ளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது” என்று கூறியிருந்தார்.

 ஆளுநர் மாளிகையின்  பொய்க்கு ஆதாரம் “அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரி விக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதுவும் உண்மைக்குப் புறம்பானது”  என்றார்.  இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு 73 பேர் கைது செய்யப் பட்டனர் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். சிசிடிவி காட்சி- ஆதாரங்கள் வெளியீடு இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்  ராய் ரத்தோர் ஆகியோர் வெள்ளிக்கிழமை யன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  அப்போது, “ஆளுநர் மாளிகை புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு  வீசப்படவில்லை. வந்தது ஒரே ஒரு நபர் தான். அவர், அத்துமீறி ஆளுநர் மாளிகை யினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளி கை வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்படவும் இல்லை. மாறாக, அவரை வெளியிலேயே சுற்றி வளைத்து தடுத்து காவல்துறையினர் கைது செய்து விட்டனர்” என்று குறிப்பிட்டனர்.  மஞ்சள் சட்டை ஜீன்ஸ் பேண்ட் அணிந்த  ரவுடி கருக்கா வினோத், தேனாம்பேட்டை யில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரை, தனது கையில் கேரி பேக்குடன் நடந்து வரும் சிசிடிவி வீடியோ காட்சிகள், புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டனர்.