tamilnadu

img

கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்.... மதுரை மக்களவை உறுப்பினர் கோரிக்கையை ஏற்று பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்.....

மதுரை:
மதுரை மாடக்குளம் கண்மாய்  குடிமராமத்து பணிகளை  ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர்செல்லூர் கே.ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் 2017 -  18 ஆம்ஆண்டில் மாடக்குளம் கண்மாய் கரைகளை பலப்படுத்துவதற்காக சுமார் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 2100 மீட்டர் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது மேலும் கடந்தஆண்டு   85 லட்சம் ரூபாயில் கண்மாய்க்குவரக்கூடிய கால்வாய் பகுதிகள் சுமார் 12 .85 மீட்டர் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டுள்ளது. இதன் மூலம் 167 மில்லிகன லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தற்போது உள்ளது இதில் மூன்று மடைகள்கொண்ட 360. 77 ஏக்கர் நீர் பரப்பளவுகொண்டது.

இந்தாண்டு கொடிமங்கலம் அருகில் 17. 39 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் தேங்காய்கால் கண்மாய் மற்றும் நிலையூர், துவரிமான், தாராப்பட்டி கண்மாய்கள் நீர் நிரம்பும், மதுரைநகர் பகுதிகளில் உள்ள கால்வாய் களும் தற்போது தூர்வாரப்படுகிறது. கிருதுமால் நதி கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப் பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.மூர்த்தி, டாக்டர் சரவணன் ஆகியோர் நாளொன்றுக்கு 3000 டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டுமென்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாளொன்றுக்கு 1500 பேருக்கு டெஸ்டுகள் எடுக்கப்படுகின்றது. மேலும் மக்கள் அதிகமாக வந்தால் அதிகப்படியான டெஸ்டுகள் எடுக்கப்படும் என்று டீன் கூறியுள்ளார். அரசாங்கம் பரிசோதனைகளில் இருந்து பின்வாங்காது. நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையைஏற்றுத்தான் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளிலேயே கண்காணித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் ஆங்காங்கே செய்யப் பட்டுள்ளது. இ- பாஸ் உள்ளவர்களை பரிசோதனை செய்து தான் உள்ளே அனுப்பப்படுகிறார்கள்” என்றார்.

மதுரையில் தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது; அதற்கான ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப் படுமா என்ற கேள்விக்கு, “எடுத்தவுடன்ஊரடங்கு உத்தரவு என்பதை அமுல் படுத்த முடியாது. பரிசோதனைகள் அதிகப்படுத்தும் போது அதிலுள்ள நிலைப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், ஆணையாளர் ஆகியோர் தேவைப்பட்டால் அந்த முடிவை எடுப் பார்கள். மதுரை பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் முகக் கவசம் அணியாமல் தான் வருகிறார்கள். எனவேதங்களுடைய  குடும்ப  பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும்  கருத்தில்கொண்டு கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

;