கண்ணூர், ஏப்.10- உதிர செங்கொடியை ஒருபோதும் தாழ விடோம்; நாடெங்கிலும் மக்களுடன் உயிர்ப்புள்ள உறவுமிக்க புரட்சிகர கட்சியாக தமது பயணத்தை கம்பீரத்துடன் எடுத்துச் செல்வோம் என கண்ணூர் மாநாட்டின் நிறைவில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார். கண்ணூரில் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது. நிறைவு நாளில் கட்சியின் புதிய மத்தியக் குழு, புதிய அரசியல் தலைமைக் குழு தேர்வு செய்யப்பட்ட பிறகு, நிறைவுரை நிகழ்த்திய சீத்தா ராம் யெச்சூரி, மக்களுடன் கம்யூனிஸ்ட்டுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கட்சியை மேலும் வலிமையாக்குவோம். இதர மாநிலங்களில் கட்சியை ஒரு வலுவான கட்சி யாக மாற்றவும், இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதிநிதிகளின் கருத்து உத்வேகமளிக்கக்கூடி யது என்று கூறினார்.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்க ளில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சி இல்லை. அதேவேளையில் கேரளாவில் இருக்கும் அரசை எப்படியாவது சீர்குலைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பாஜக தலை மையிலான ஒன்றிய அரசும், இந்துத்துவ அமைப்புகளும் தொடர்ந்து சீர்குலைவு வேலை களில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார். அகில இந்திய மாநாடு நடைபெற்ற கண்ணூர் என்பது தியாகத்தால் சிவந்த பூமி என்று பெரு மிதத்தோடு கூறினார். கையூர் தியாகிகள் தலை மறைவு வாழ்க்கையை பல ஆண்டுகாலம் அனு பவித்து கட்சியை பாதுகாத்த மாபெரும் தியாகி களின் பூமி கண்ணூர் என்றும், இந்த மண்ணில் பிறந்த வழிதோன்றல்களான மார்க்சிஸ்ட் கட்சி யின் தொண்டர்கள் மக்களின் ஒற்றுமையை பாது காக்கவும், நாட்டைப் பாதுகாக்கவும், தாங்கள் ஏந்திய செங்கொடியை ஒருபோதும் தாழவிட மாட்டார்கள் என அவர் கூறினார். மதம் மற்றும் மதவெறி குறித்து மக்களி டையே விழுப்புணர்வை ஏற்படுத்துவது அவசி யம். மதம் என்பதை பொறுத்தவரை ஒவ்வொரு வரின் தனிப்பட்ட உரிமை சார்ந்தது; அதே வேளையில் , மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை திசைதிருப்பி விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மக் களை இந்துத்துவ சக்திகள் பிளவுபடுத்துவதாக அவர் கூறினார்.
மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தெரிவித்த யோசனைகள் பலனுள்ளதாக இருந்ததாகவும், மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தவும், மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக நாட்டை தொடர்ந்து பாதுகாக்கவும் உறுதியோடு பணியாற்றிட மாநாடு முடிவு செய்துள்ளதாக கூறினார்.
பினராயி விஜயனுக்கு விலக்கு
கட்சியின் புதிய வயது விதிமுறைகளின்படி தோழர் பினராயி விஜயனுக்கு வயது அதிக மாக இருந்தாலும், முதலமைச்சர் என்பதாலும், அதே நேரத்தில் கட்சியில் 40 சதவிகிதத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் கேரளாவை சேர்ந்த வர்கள் என்பதாலும் விதிவிலக்கு அளிக்கப் பட்டு, தோழர் பினராயி விஜயன் மத்தியக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார் என சீத்தா ராம் யெச்சூரி தெரிவித்தார்.
மூத்த தலைவர்களுக்கு உணர்ச்சி மிகு கவுரவிப்பு
வயது மூப்பு காரணமாக மத்தியக் குழுவிலி ருந்து விடுவிக்கப்பட்ட - அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாக நீண்டகாலம் பணி யாற்றிய மூத்த தலைவர்கள் பி.ராமச்சந்தி ரன்பிள்ளை, பிமன்பாசு, ஹன்னன் முல்லா ஆகி யோரது பணிகளை பாராட்டும் வகையில், மாநாட்டு மேடையில் பொதுச் செயலாளரால் கெளரவிக்கப்பட்டனர். அப்போது அரங்கில் இருந்த பிரதிநிதிகள் அனைவரும் உரத்தக் குர லில் செவ்வணக்கம் என உணர்ச்சிமிகு முழக் கங்களை எழுப்பினர்.