tamilnadu

img

கொல்லைப்புறமாக ஆட்சியை கவிழ்த்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்கள்

சென்னை, மே 13- கர்நாடக தேர்தலின் மூலம் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கர்நாடக தேர்தலில் மக்கள்  பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர். கடந்த தேர்தலை விட 30 தொகுதி களை பாஜக இம்முறை இழந்துள்ளது. வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என்பதை அவர் கள் உணர வேண்டும். தென்னிந்தியாவில் கர்நாடகா வழியாக பாஜக  ஊடுருவி, மற்ற மாநிலங்க ளுக்குள் வர முயற்சிக்கிறது.  வழக்கமாக பாஜக தில்லு முல்லு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து கொல் லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய் வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் நாட்டை காப் பாற்ற காங்கிரஸ் கட்சி  எம்எல்ஏக்கள் ஒற்றுமை யாக இருக்க வேண்டியது இன்றிய மையாதது என்றார்.

இந்த முறை மதச்சார் பற்ற ஜனதா தளம் பெறும்  பின்னடைவை சந்தித்துள் ளது. பாஜகவுக்கு வலிமை கொடுக்கும் வகையில், பல மாநிலங்களில், பல  மாநிலக் கட்சிகள் மதச்சார் பற்ற ஜனதா தளம் போல் இயங்குகிறது. பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும், இந்த கர்நாடக  சட்டமன்றத் தேர்தலை பார்த்து ஒரு நல்ல முடிவிற்கு வர வேண்டும். அதிமுக இப்போதே சுதாரித்துக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் சேர்வதால் அவர்களுக்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு தொய்வுதான் ஏற்படும். இந்தத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் எதிர்க்கட்சி களிடையே பெரிய இடைவெளி இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை என்றும் அவர் கூறினார். அண்ணாமலையின் பேச்சை மக்கள் ஒரு பொருட் டாக எடுத்துக் கொள்வ தில்லை. அதனால் எந்த  தாக்கமும் ஏற்படாது. மற்றவர்களின் பேச்சுகளை ஆடியோவாக பதிவு செய்வ தும், வீடியோவாக பதிவு செய்வதும் பாஜகவின் அணுகுமுறையாக இருக்கி றது. கர்நாடகாவில் காலூன்ற முடியும் என்ற  இடத்திலேயே மக்கள்  பாஜகவை புறக்கணித்துள் ளனர் என்றும் திருமாவள வன் கூறினார்.