tamilnadu

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

இராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம்,  இராஜபாளையம் அருகேஉள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியின் செல்போனுக்கு தவறான அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய சேலம் மாவட்டம்,  ஓமலூர்பகுதியைச் சேர்ந்த   சிங்காரவேலன் (25) என்பவர், அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்பு,அவரை திருமணம் செய்வதாகக் கூறி கடந்த  15-ஆம்தேதி ஓமலூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இந்த நிலையில்,  சிறுமியைக் காணவில்லையென சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் செல்போணில் வந்த எண்ணை ஆய்வு செய்த காவல்துறையினர் சேலம்சென்று சிறுமியை மிட்டனர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

                                   ******************

முத்துவயல்  ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல்

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் ஊராட்சித் தலைவர் ரவி மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வன்கொடுமை சட்டப்படிநடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.கலையரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கை:-முத்துவயல் ஊராட்சித் தலைவர் ரவி ஊராட்சியில் அனைவரும் பயன்படும் வகையில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் ஊராட்சித் தலைவர் வனிதாவின்  சகோதரர்கள் காவேரிதாசன், தமிழ்தாசன்மற்றும் ராஜேஷ், விவேக் ஆகியோர் முத்துவயல் ஊராட்சித் தலைவர் ரவியை தாக்கி உள்ளனர். மக்கள்பணியாற்றிய தலித் ஊராட்சித் தலைவரை மற்றொருசமுகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியது கண்டனத்திற்குரியது.குற்றவாளிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை உடனடியாகை கைது செய்ய வேண்டும். 

                                   ******************

மாதர் சங்க பேரவை

சாத்தூர்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சாத்தூர் நகர் பேரவை  பரமேஸ்வரி தலைமையில் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் எஸ்.தெய்வானை துவக்கிவைத்தார். சிஐடியு கன்வீனர் ஏ.சீனிவாசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சாரதாபாய் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி  நிறைவுசெய்து பேசினார்.நிர்வாகிள் தேர்வு: தலைவர்- ராணி, செயலாளர்- பரமேஸ்வரி, பொருளாளர் -சீதா. 

                                   ******************

மக்கள் கோரிக்கை 

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:எஸ்.கொடிக்குளம்,  திருவள்ளுவர் தெரு.  பகுதியில் 200 வீடுகளில் 300 அருந்தியர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வேறு அரசு சலுகைகள் எதையும் பெறவில்லை. எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

;