tamilnadu

img

கொலம்பியாவில் தொடரும் வன்முறை !

தென்     அமெரிக்க நாடான கொலம்பியாவில் மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறு கிறது. ஈங்கிரிட் பெட்டன்கோட் என்ற வலதுசாரி நடுநிலை வாத அம்மையாரும் 400 வேட்பாளர்களில் ஒருவர். இந்த அம்மையாரை 2002-இல் கொலம்பியா புரட்சிகர ஆயுதம் தாங்கிய குழுக்கள் கடத்தி ஆறு ஆண்டுகாலம் காட்டுச் சிறைகளில் வைத்தனர். இறுதியில் கொலம்பிய ராணு வம் மீட்டது. அமைதி ஒப்பந்தம் மதிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தியது.  ஆனாலும் வன்முறைகள் 1970 லிருந்து நின்ற பாடில்லை. 2022 ஜனவரி 19 இரவில் ஒரு மிகப்பெரிய அலுவலகம் காரில் வெடிகுண்டு வைத்து சேதப் படுத்தப்பட்டது. இந்த அலுவலகத்தில் ‘பிராண்டியர்ஸ்’ என்ற பத்திரிகை அலுவலகம் ,மனித உரிமை காப்பக அலுவலகம், விவசாயிகள் மற்றும் மாதர் இயக்க அலு வலகங்களும் உள்ளன. கொலம்பியாவின் ஜனநாயக இயக்கங்கள் இந்த வன்முறைத் தாக்குதலை கண்டித்து உள்ளன. கொலம்பிய ஆயுதம் தாங்கிய குழுக்களில் அதிருப்தியுற்று பிரிந்த சிலரே இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தினர். கொலம்பியா அரசு தாக்குதல் நடந்த அரௌகா நகரில் மேலும் ராணுவத்தினரை குவிக்க முடிவு செய்தது. மக்கள் இதை விரும்பவில்லை. வறுமைக்கு தீர்வு காண வேண்டும்; உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கின்ற னர்.