tamilnadu

பொய் புகார் அளித்த குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை தேவை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

மதுரை, மே 27- மதுரை கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவ லகத்தில் செவ்வாயன்று புகார் மனு  அளித்தார். அந்த மனுவில், கருவே லம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் கல்குவாரியால் கிரா மத்தில் வீடுகள், பள்ளி, விளைநிலங்க ளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கிராம  மக்கள் சார்பில் மாவட்டநிர்வாகத்திடம் கடந்த 9 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.  புகாரின்பேரில் திருமங்கலம் வருவாய்  கோட்டாட்சியர், திருப்பரங்குன்றம் வரு வாய் ஆய்வாளர், கனிமத்துறை அதிகாரி கள் மே 12ஆம் தேதி கருவேலம்பட்டி பகுதி யில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது குவாரிக்குஅருகில் உள்ள குடியிருப்பு கட்ட டங்கள், அரசு உயர்நிலைப்பள்ளி கட்ட டங்கள், விளை நிலங்கள் பாதிப்புக்கு ஆளாவது தெரியவந்ததை அடுத்து மறு உத்தரவு வரும் வரை அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் குறிப் பாணையில் தெரிவிக்கப்பட்டது.

 மேலும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மே 16 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். இதனால்  குவாரி தற்போது செயல்படவில்லை. ஆனால் இயந்திரங்கள் பழுதுபார்ப்பு  என்ற பெயரால் குவாரிபணியாளர்கள் தினசரி வந்து செல்கின்றனர். இதில் குவாரி நிறுவனத் தின் சார்பில் மே 20 இல் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில், குவாரிக்கு எதிராக போராடிய நான்கு இளைஞர்கள் மீது குவாரி பூட்டை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த புகாரின்பேரில், ஆஸ்டின்பட்டி காவல்துறையினர், இளைஞர்கள் உள்ளிட்ட கிராம மக்களை விசாரணை என்ற பெயரில் தினசரி காவல்நிலையம் வரவைத்து பல மணி நேரம் காக்கவைத்து எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதனால் கிராம மக்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே கிராம மக்களை பழிவாங்குவதற்காக பொய் புகார் அளித்துள்ள குவாரி உரிமையாளர் உள்ளிட்டோர், மற்றும் குவாரி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர். மேலும் ஊரகக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

;