tamilnadu

img

மதுரை மக்களுக்கு தட்டுப்பாடின்றி பலசரக்குப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை தேவை.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மதுரை:
மதுரை மக்களுக்கு தட்டுப்பாடின்றி பலசரக்குப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் விடுத்துள்ள அறிக்கை:-

"கொரோனா வைரசை கட்டுப்படுத்த  அரசு 144- தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை  மாநகராட்சி சார்பில் சில பகுதிகளில் இயங்கி வரும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடைகளின் தொலைபேசி, செல்பேசி எண்களை தெரிவித்து போன் மூலமாக ஆர்டர் செய்து வீட்டிற்குத் தேவையான அத்திவாசிய பொருட்களை பெற்றுவருகின்றனர். 

தற்போது மதுரை நகரில் சிறு மளிகைக்கடைகள் காலையில் திறக்கப்பட்டு மதியம் வரை வியாபாரம் செய்கின்றனர்.  சிறுகடை வியாபாரிகள் மதுரை கீழமாசி வீதியில் பகுதியைச் சுற்றியுள்ள மளிகைக் கடைகளில் தங்களுக்குத் தேவையான பருப்பு வகைகள் , இதர மளிகை பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். இந்த  நிலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் இதர மளிகை பொருட்களுக்கு தட்டுபாடு  ஏற்பட்டுள்ளது. பொருட்கள் கிடைக்காததால் விலை உயர்வு அதிகரித்துள்ளது. கீழமாசி வீதி பகுதியில் உள்ள கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள "தானியங்கள்" வீணாகும் நிலை ஏற்படுகிறது என்று அங்குள்ள கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். மதுரை மாவட்ட நிர்வாகம் கீழமாசி பகுதியில் உள்ள மொத்த வியாபார கடைகளை தினசரி  50 ௧டைகள் என்ற எண்ணிக்கையில் திறந்து சில்லரை வியாபாரிகள் பொருட்களை வாங்கிச் செல்வதற்கும்.   சிம்மக்கல், தெற்கு மாசி வீதி ஆகிய இரு பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அளித்து ஒரு  குறிப்பிட்ட எண்ணிக்கையில்  சில்லறை வியாபாரிகள். பொருட்களை வாங்கிச் செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனை குறித்து கூட்டுறவுத்துறை  அமைச்சர், மதுரை மக்களவை உறுப்பினர்  ஆகியோரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வியாபாரிகள், மக்கள் சிரமங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.