விஜய்யின் பாதுகாவலர்களை கைது செய்ய வேண்டும்!
குமுதம் டி.வி. ஒளிப்பதிவாளர் இளங்கோ மீது கடுமையான தாக்குதலை அரங்கேற்றியுள்ள நடிகர் விஜய்யின் பாதுகாவலர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சங்கம் (T.U.J) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன் வெளியிட்டு ள்ள அறிக்கை வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) அருகில் உள்ள பனையூரில் பிப்ரவரி 26 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் விழாவிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற குமுதம் டி.வி.யின் ஒளிப்பதிவாளர் இளங்கோவன் மீது நடிகர் விஜய்யின் பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். \
இதில் அவர் காயமடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலை, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் ஸ் சங்கம்(T.U.J) வன்மையாக கண்டிக்கிறது. மேலும், குமுதம் ஒளிப்பதிவாளர் இளங்கோவை தாக்கிய நபர்களை கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு, விஜய் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.