tamilnadu

img

தொழில்நுட்ப பணமோசடிகளை அம்பலப்படுத்தும் “விழித்தெழு”

சிவகங்கை, செப்.25- தொழில்நுட்ப பண மோசடிகளை அம்பலப் படுத்துகிற படமாக விழித் தெழு திரைப்படம் இருக்கும்   என்று தயாரிப்பாளர் துரை ஆனந்த் தெரிவித்தார். சிவகங்கை நகர்மன்ற  தலைவர் துரை ஆனந்த் தயா ரிப்பில் உருவாகி வருகிற விழித்தெழு என்கிற திரைப் படத்தின் படப்பிடிப்பு  வேம் பங்குடியில் நடைபெற்று வருகிறது. இதில்  நடிகர்  ‘பருத்திவீரன்’ சரவணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர் கள் பங்கேற்று நடித்து வரு கின்றனர்.  படப்பிடிப்பு தளத்தில் நடி கர் சரவணன் கூறுகையில், நாடு முழுதும் அன்றாடம் மக்  கள் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்து கொண்டிருக்கிற கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது. இன்  றைய தினம் கூட பத்திரிகை யில் செய்தி படித்தேன். அந்த செய்தியில் ஒரு கிலோ தங்  கம் இருக்கிறது. ரூ.10 லட்சம் தாருங்கள் என்று சொல்லி ஏமாற்றிய தகவலை படித்  தேன். இதுபோன்று ஆன்  லைனில் ஏமாற்றும் தில்லு முல்லுகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. ஏமாறும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்  கிற நோக்கத்தோடு சிவ கங்கை நகர் மன்ற தலை வர் அண்ணன் துரைஆனந்த் விழித்தெழு என்கிற படத்தை எடுத்து வருகிறார்.

நல்ல தொரு வெற்றி படமாக இப்  படம் இருக்கும். மக்களுக் கும் பயனுள்ள கருத்தை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத் தோடு இப்படத்தை தயா ரித்து வருகிறார்.அவரும்  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கிறார் என்றார். படத்தின் தயாரிப்பாள ரும் சிவகங்கை நகர்மன்ற தலைவருமான துரை ஆனந்த் கூறுகையில், பல் வேறு திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். திரைப்பட நடிகை கே. ஆர். விஜயாவோடு நடித்திருக்கி றேன். அதேபோன்று விளம் பர படங்களில் நடித்து வரு கிறேன்.விழித்தெழு என்கிற படத்தை தயாரித்து வரு கிறேன். எனது பேரன் ஆத வன் பெயரில் ஆதவன் சினி எண்டர்பிரைசஸ் இப் படத்தை தயாரிக்கிறது.  இப்படம் நல்லதொரு வெற்றியை பெற்றுத் தரும்.  மூன்று மொழிகளில் இப்  படம் வெளிவர உள்ளது. விடு தலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள், வீர மங்கை வேலுநாச்சியார், குயிலி ஆகியோரை மைய மாக வைத்து விழித்தெழு படத்தில் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது என்று தெரி வித்தார். திரைப்பட இயக்குனர் தமிழ்செல்வன் கூறும் போது,  இப்படம்  நல்ல வெற்  றிப்படமாக அமையும். ஏனென்  றால் மக்களிடம் அன்றாடம் நடக்கிற தொழில்நுட்ப மோசடிகளை அம்பலப் படுத்துகிற படமாக இப்படம் இருக்கிறது என்று தெரி வித்தார்.

;