tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன், தீவிரமாக வாக்காளர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். செல்லும் இடமெல்லாம் மக்கள் பெருவாரியாகத் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். திங்களன்று மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்ட சு.வெங்கடேசனுக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, வெற்றித் திலகமிட்டும், பூமாரி பொழிந்தும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

;