காய்கறி விதைகள், பழச்செடி தொகுப்பு வழங்கல்
கும்பகோணம், ஆக. 19- ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், காய்கறி விதைகள் தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் துவக்கமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகனுக்கு, காய்கறி விதைகள் மற்றும் பழச்செடி தொகுப்பினை தோட்டக்கலை உதவி இயக்குநர் பொ. அனுசியா வழங்கினார். இந்நிகழ்வில், அட்மா குழு தலைவர் பாரதி, தோட்டக்கலை அலுவலர் அசோக்ராஜ், வேளாண்மை அலுவலர் இரா. பிரகாஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் (பொ).அனுசுயா, சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்றினர்.