tamilnadu

img

வைரஸ் நோய்க்கு எதிராக யானைகளுக்கு தடுப்பூசி - சிதம்பரம் ரவிச்சந்திரன்

யுஎஸ் ஹூஸ்ட்டன் விலங்கு காட்சிச் சாலையில் வாழ்ந்துவரும் டெஸ் (Tess) என்ற 40 வயது பெண் யானைக்கு காட்சிசாலைகளில் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஆசிய யானைக் குட்டிகளை கொல்லும் எண்டோதெலியோடிராபிக் ஹெர்ப்பெஸ் (endotheliotropic herpesvirus (EEHV) வைரஸ் நோய்க்கு எதிராக உலகின் முதல் எம் ஆர் என் ஏ (mRNA) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எதிர்ப்பாற்றலுடன்  பிறக்கும் யானைகள்

மனிதர்களிடம் ஹெர்ப்பீஸ் குறித்த ஆய்வுகளை நடத்திய ஹூஸ்ட்டன் பேய்லா (Baylor) கல்லூரி ஆய்வாளர் டாக்டர் பால் லிங் (Dr Paul Ling) குட்டி யானைகள் இடையில் நோய் எதிர்ப்பாற்றலை அதி கரிக்க உதவும் இந்த தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளார்.”யானைகள் பிறக்கும் போதே தாயிடம் இருந்து ஏராளமான நோய் எதிர்ப்புப்பொருட்களை (antibodies) பெறுகின்றன. ஒரு பெண் யானை ஒரு குட்டியை பிரச விக்கும்போது அதனிடம் இந்த வைரஸ் ஏற்கனவே இருக்கும். அதனால் அது தன் குழந்தைக்கு ஹெர்ப்பெஸ் நோய்க்கு எதி ரான தடுப்பாற்றலைக் கொடுக்கிறது. ஹெர்ப்பெஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் குட்டியிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருக்கிறது. சிறிதுகாலத்திற்கு பிறகு குட்டிகள் இழக்க நேரிடும் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி நீண்டகாலம் போதிய அளவிற்கு தரும்” என்று டாக்டர் பால் லிங் கூறுகிறார். வடிவமைப்பில் இந்த எம் ஆர் என் ஏ  தடுப்பூசி சமீபத்தில் மனித குலத்தை தாக்கிய  கோவிட் 19 தடுப்பூசியை போன்றது. ஹெர்ப்பெஸ் நோயால் யானைக் குட்டிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற, உயிரிழப்பைத் தடுக்க இது உத வும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனி தர்களிடம் இபோலா (Ebola) போல யானை களிடையில் இது மரணத்தை உண்டாக்கும் விதத்தில் இரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் ஆசிய யானைகளிடம் தும் பிக்கையின் வழியாக பரவுகிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். யானைகளிடம் இந்த நோய் முதலில் 1990இல் கண்டுபிடிக்கப்பட்டது. 1999 இல்  அறிவியல்ரீதியாக பெயரிடப்பட்டது. ஆசிய  யானைகளிடம் குறிப்பாக காட்சிச் சாலை களில் வாழும் யானைகளில் உயிர் பறிக்கும்  முக்கியக் காரணியாக இந்த நோய் உள் ளது. டப்ளின் காட்சிச் சாலையில் ஜூலை  2024 இல் இரண்டு குட்டி யானைகள் இந் நோயால் உயிரிழந்தன. இதன் பாதிப்பால் செஸ்ட்டர் (Chester),மெல்பெர்ன் மற்றும் ஜூரிச் காட்சிச் சாலைகளில் பல இளம் யானைகள் உயிரிழந்துள்ளன. நோய் அறிகுறிகள் தென்படும் யானை களில் இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் 70%. காடுகளில் வாழும் யானைகளிலும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால் நிபுணர்களுக்கு காட்டு யானைகளிடம் இந்நோயின் தாக்கம் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. இதை சமாளிக்க தடுப்பூ சித் திட்டம் எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியமானது என்பதும் தெரியவில்லை. இப்போது காடுகளில் சுமார் 50,000 ஆசிய யானைகள் மட்டுமே வாழ்கின்றன.

தடுப்பூசியின் வெற்றி

இந்த உயிரினங்கள் அழியும் ஆபத்  திற்கு உள்ளாகியுள்ளன. வாழிட இழப்பு,  வேட்டையாடல், மரபணுரீதியாக தனி மைப்படுத்தப்பட்டது போன்றவை இவற்றின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளன. “ஹெர்ப்பெஸ் வைரஸ் ஆசிய யானைகளின் நீண்ட ஆயுளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. இந்தியா, நேபாளம், மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடு களில் இந்த நோயால் இறக்கும் யானை களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிக ரித்துவருகின்றது. இதற்கு ஒரே நீண்ட காலத்  தீர்வு ஹெர்ப்பெஸ் வைரசுக்கு எதிரான வலி மையான தடுப்பூசித் திட்டம் மட்டுமே. இது  காட்சிசாலைகளில் நடைபெறும் தடுப்பூசி  ஆய்வுகள் மூலம் விரைவில் அங்கீகரிக் கப்படும் என்று நம்பப்படுகிறது” என்று செஸ்ட்டர் காட்சிச் சாலை செய்தியாளர் கூறுகிறார்.  நம்பகமான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் உலக சூழல் அமைப்புகள் முன்னேற்றம் அடைந்துள்ளன என்றாலும் இதற்கான தேடலுக்கு இது பற்றி மேலும்  தீவிர ஆய்வுகள் மற்றும் நேரம் தேவைப்படு கிறது. தடுப்பூசியின் நம்பகத்தன்மை பற்றிய அறிவியல்பூர்வமான அங்கீகாரமும் அவசியம். தடுப்பூசி கொடுக்கப்பட்ட பிறகு டெஸ் யானையின் ஆரோக்கியத்தை ஆய் வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்றால் மேலும் பல ஆசிய யானைகளுக்கு இந்த  தடுப்பூசியை ஆண்டு இறுதியில் பயன் படுத்துவது பற்றி ஹூஸ்ட்டன் காட்சிச் சாலை  தீர்மானிக்கவுள்ளது. இந்த தடுப்பூசி ஹூஸ்ட்டன் காட்சிச் சாலை, பேய்லர் மருத்துவக் கல்லூரி மற்றும் டல்லாஸ் (Dallas) நகரில் அமைந்துள்ள அழிவில் இருந்து உயிரினங்களை மீட்கச் செயல்படும் கொலோசால் (Colossal) நிறுவனத்தின் பங்காளித்துவத்துடன் உரு வாக்கப்பட்டது. அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ள ஆசிய யானைகளின் உயிர் காக்கச்  செயல்படுத்தப்படும் இந்த தடுப்பூசித் திட்டம் யானைகள் உட்பட வன உயிரி னங்களை அழிவில் இருந்து மீட்கும் மனித முயற்சியில் ஒரு புதிய மைல்கல்லாக அமை யும் என்று நம்பப்படுகிறது.