tamilnadu

செய்தித் துறை உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்

செய்தித் துறை உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்

துணை இயக்குநர் பதவி உயர்வு சென்னை, ஜூன் 25 -  தமிழ்நாடு அரசு பல்வேறு துறை களில் பணிபுரியும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி  இயக்குநர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழரசு அலுவலக உதவி இயக்குநர் கே.ஏ. முகமது ரசூல்  தலைமையிடத்து நினைவக உதவி இயக்குநராக பணியிட மாற்றம் பெற்று உள்ளார். தமிழ்நாடு திரைப்பட தொழி லாளர் மற்றும் பத்திரிகையாளர் நல வாரிய உதவி இயக்குநர் எஸ். தீபா தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை உதவி இயக்குநராக பணியிட மாற்றம்  பெற்றுள்ளார். தலைமையிடத்து பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.  பாரதி தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள்  தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம்  பெற்றுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செய்தி  மக்கள் தொடர்பு அலுவலராக கே.  சுப்பையா பணியிட மாற்றம் பெற்றுள்ளார். தலைமையிடத்து நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.  பிரசன்னா வெங்கடேசன் வள்ளுவர் கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலு வலராக பணியிட மாற்றம் பெற்று உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குநர் ஆர். நடராஜன் சென்னை மெட்ரோ ரயில் துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று உள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் உதவி இயக்கு நர் பி. கலைநேசன் சென்னை எழிலகம்  வருவாய் துறை நிர்வாக அலுவலகத் தில் துணை இயக்குநராக பதவி உயர்வு  பெற்றுள்ளார். பிஆர்ஓ 8 பேருக்கு உதவி இயக்குநர் பதவி உயர்வு திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.ஜெய  அருள்பதி திருநெல்வேலி அரசு போக்கு வரத்து கழகத்தில் உதவி இயக்குந ராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பாவேந்தன் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக உதவி இயக்குநராக உயர்வு பெற் றுள்ளார். தமிழரசு செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர் எஸ். உதயா கதிரவன் தமிழ ரசு அலுவலக உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தலைமை யிடத்து செய்தி வெளியீட்டு பிரிவு  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பி. முத்தமிழ் செல்வன் தமிழ்நாடு  திரைப்பட தொழிலாளர் மற்றும் பத்திரி கையாளர் நல வாரியத்தில் உதவி இயக் குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். சுவாமிநாதன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.  தமிழ்ச்செல்வன் இப்பணி இடத்தி லேயே உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருநெல்வேலி அரசு போக்கு வரத்துக் கழக செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர் டி.நவாஸ் கான் தூத்துக்குடி  அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி  இயக்குநராக பதவி உயர்வு பெற்று உள்ளார். மாநில தகவல் ஆணையத் தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  எஸ். இளங்கோ வேலூர் அரசு போக்கு வரத்துக் கழகத்தில் உதவி இயக்குந ராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.