tamilnadu

உக்ரைனுக்கு ஆயுதங்கள்: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை மார்ச் 12ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனுக்கு  சுமார் 20 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி தலைவர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் கூறுகையில், உக்ரை னுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்புவது ஆபத்தாக விளையும். மேலும், ஆயுதங்களை அனுப்பும் வாகன அணிகள், ரஷ்யப் படையால் சட்டப்படியாக இலக்கு வைத்து தாக்கப்படும் என்றார். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் ரஷ்யா மீதான தடை நடவடிக்கைக்கு எதிராக தனது தடைப் பட்டியலை ரஷ்யா விரைவில் வெளியிடும் என்றும் அத்துடன், பாதுகாப்பு விவகாரம் மற்றும் நெடுநோக்கு ஆயுதங்களைக் குறைக்கும் உடன்படிக்கை பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார் செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.