சிதம்பரம் நகராட்சி வார்டு 5-இல் தஸ்லிமா, வார்டு 33-இல் முத்துக்குமரன் ஆகியோர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, மூசா, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஓசூர் மாநகராட்சி 44ஆவது வார்டு மத்திகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிமனையை சேதுமாதவன் திறந்து வைத்தார். மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, ஓசூர் ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி, கிளைச் செயலாளர்கள் புனிதவல்லி, ரவி, வேட்பாளர் வெண்ணிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.