tamilnadu

img

சல்லிக் காசு கூட வழங்காத ஒன்றிய அரசு

சென்னை,பிப்.22- மெட்ரோ ரயில் திட்டத் திற்கு ஒன்றிய அரசு சல்லிகாசு கூட வழங்க  வில்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசு கையில்,  அரசுக்கு மாபெரும்  தமிழ்க் கனவு உள்ளது; இதை  கருத்தில் கொண்டுதான்  பட்ஜெட் தயாரிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூக நீதி பிரதிபலிக்கிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத் துக்கு ரூ.3,050 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது” என்றார். பேருதான் பெரியது! வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் தரவில்லை. ஒன்றிய அரசு திட்டங்களின் பெயர்கள் பெரிதாக இருக்கிறதே தவிர, தமிழ் நாட்டுக்கு எந்த நிதியும் தரவில்லை என்று அமைச்சர் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார். பாரபட்சம் குஜராத் வெள்ள பாதிப்புக்கு அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாடு வெள்ளத்தில்   தத்தளித்தபோதும்  நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று காரணத்தை காட்டி ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது  என்றும் அவர்  குறிப்பிட்டார்.   குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைக்காக பேசிய மோடி, இப்போது மாநில  உரிமைகளை மதிப் பதில்லை. பிரதமர் தூத்து குடிக்கு வருவதற்கு முன்பே  ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்கும்  என நம்புகிறேன். பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு  ஒன்றிய அரசு 30 விழுக்காடு  நிதியை மட்டுமே அளிக்கி றது. மீதி தொகையை மாநில அரசுதான் செல வழிக்கிறது.  ஆனால்  அந்த  திட்டத்திற்கு பிரதமர் வீடு  கட்டும் திட்டம் என்று  பெயரை வைத்துக்கொண்ட தாகவும் ஒன்றிய அரசை அமைச்சர் தங்கம் தென்னரசு  கடுமையாக சாடினார்.