சென்னை, மே 6- தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலை மையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் சென்னை கலை வாணர் அரங்கில் சனிக்கிழமை (மே 6) மாநில அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒரு லட்சம் பய னாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட் டத்தின் கீழ் உயர்கல்வி உதவித் தொகைக்கான வங்கி பற்று அட்டை கள், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேட யங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:- இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் முதலமைச்சர் பொறுப்பில், தமி ழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா என என்னை நானே கேட்டுக்கொண்ட போது, என் மனதிற்கு தெம்பும் தைரிய மும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் தான். மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல. சிறுவனாக இருந்த போதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தமிழ கத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர். அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன்.
மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. மாணவர்கள், தொழிலாளர் கள் என அனைத்து தரப்பின ரையும் கை தூக்கி விடும் அரசு தான் திமுக அரசு. அனை வருக்குமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல் படுவது திமுக அரசு. சாதி, மதத்தால் மக்க ளைப் பிரிக்க நினைப்ப வர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. மக்க ளுக்கு சம்பந்தமில்லாத பதவியிலிருப்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டிய அவ சியமில்லை. நம் கடமையை செய்தால் போதும் என்ற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன். இவ்வாறு அவர் பேசி னார். முன்னதாக முதலமைச் சர், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ள திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், செய்தி மக்கள் தொ டர்புத்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை செயலா ளர் வெ.இறையன்பு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.