tamilnadu

img

தூத்துக்குடி என்டிபிஎல் தொழிலாளர்கள் 7வது நாளாக போராட்டம்

தூத்துக்குடி , பிப்.19- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-(சிஐடியு) சார்பில் தூத்துக்குடி, என்டிபிஎல் அனல்மின் நிலைய (1000 மெகாவாட்) தொழி லாளர்கள்  பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி அனல்மின் நிலை யம் முன்பு பிப்.13 முதல் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போ ராட்டம் ஞாயிறன்றுடன் (பிப்.19) 7-வது நாளை எட்டியுள்ளது. மேலும், 5 கட்டமாக நடத்தப் பட்ட பேச்சு வார்த்தை தோல்விய டையந்ததை அடுத்து 6ம் கட்ட பேச்சு வார்த்தையானது, திங்களன்று சென்னையில் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்க ளை சந்தித்த சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் கூறுகையில், ‘‘தூத்துக் குடி என்டிபிஎல் ஆலைத் தொழிலா ளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றுடன் ஆறாவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதுவரை ஐந்து கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து என்டிபிஎல் நிறுவனம் மறுத்து வருகிறது.

சென்னையில், பிப்.20 (இன்று) முதன்மை தலைமை தொழிலாளர் துறை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகி யுள்ளது. ஆறு நாள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் தரப்பில், சட்டப்பூர்வமாக இருக்கக் கூடிய தொழிலாளர்களின் நலத் திட்டம் சார்ந்த உரிமைகளை வழங்கு வதற்கு அவர்கள் முன் வருகிறார் கள்; இதர சம்பள உயர்வு, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலா ளர்களை மீண்டும் பணியமர்த்துவது தொடர்பாக பேசுவதற்கு அவர்கள் தாமதம் செய்து வருகின்றனர். என்டிபிஎல் நிர்வாகத்தின் இந்த போக்கினை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத் தினருடன் போராட்டம் நடத்தி யுள்ளனர்.  புற வழியாக வேறு ஆலை யில் பணியாற்றக்கூடிய தொழிலா ளர்களை என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் வேலையில் ஈடுபடுத் தும் ஆலையின்  செயலை நிறுத்த வேண்டும்; தொழில் அமைதியை காப்பதற்காக மாநில அரசு முன்வர வேண்டும்; மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஒன்றிய அரசின் நிலக்கரி துறை அமைச்சகம், மின் வாரிய அமைச்சகம் உரிய தலை யீடு செய்து என்எல்சி நிறுவ னத்தில் வழங்கக்கூடிய சம்பளத்தை  என்டிபிஎல் அனல் மின் நிலையத் தில் பணியாற்ற கூடிய தொழிலா ளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்று அமல்படுத்த வேண்டும். என்டிபிஎல் நிறுவனம் பிற ஆலை களில் பணியாற்றக்கூடிய தொழிலா ளர்களை வைத்து இந்த வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான தொழில் அமைதிக்கு உதவாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்’’ என்றார்.