tamilnadu

img

‘பைக் டாக்ஸி’களுக்கு அனுமதி இல்லை

சென்னை, ஜூன் 9- தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி களுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ரேபிடோ, ஓலா போன்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ‘பைக் டாக்ஸி’கள் இயக்கப் பட்டு வருகின்றன. மாணவர்கள், பகுதி நேர வேலை வேண்டுவோர், அவ்வப் போது பணம் தேவைப்படு பவர்கள் தங்கள் சொந்த இருசக்கர  வாகனங்களை, தனியார் நிறுவனத்து டன் இணைத்துக் கொண்டு டாக்ஸி யாக இயக்குகின்றனர். செல்போன் செயலி மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்தால், அந்த  இடத்துக்கே வந்து அழைத்துச்சென்று, நாம் விரும்பும் இடத்தில் இறக்கிவிடு கின்றனர்.  ஆட்டோ, வாடகை கார்களை விடவும் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் பலர் பைக் டாக்ஸியை நாடத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப பைக் டாக்ஸிகளை இயக்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பைக் டாக்ஸிக்கு தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர்,“  சில விஷயங்களில் ஒன்றிய அரசு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பைக் என்பது தனி நபர் பயன்படுத் தும் வாகனம். வாடகைக்குவிடப்படும் வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. பைக் டாக்ஸிகளை பயன்படுத்த கூடாது  என்பது தமிழ்நாடு அரசின் நிலைப் பாடு. காவல்துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

;