அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது தமிழ் மாநில மாநாடு கடலூரில் வியாழனன்று (செப். 28) துவங்குவதையொட்டி தோழர் வெ.சந்திரா நினைவு சுடர் பயணம் புதுச்சேரியில் பிரதேச தலைவர் டி.ஜி.முனியம்மாள் தலைமையில் துவங்கியது. நினைவுச் சுடரை சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் புதுச்சேரி பிரதேச செயலாளர் இளவரசியிடம் வழங்கினர். இதில் நிர்வாகிகள் சத்யா, கலையரசி, உமா, சாந்தி, தாட்சாயணி, ஜானகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.