பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வை நிலுவையுடன் வழங்க கோரி செவ்வாயன்று (ஜூன் 7) தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் பேசினர்.