நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கல்
தூத்துக்குடி, ஜூலை 31- கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் உடன்குடி ஒன்றியம் பரமண் குறிச்சி பகுதி முந்திரி தோட்டம்- தோட்டத் தார் விளை மக்களுக்கு ஓமியோபதி மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் முத்துக் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சொர்ணம் முன்னிலை வகித் தார். ஒன்றிய பொருளாளர் பாலசிவ சங்கர் வரவேற்றார். நோய் எதிர்ப்பு சக்தி பற்றி மருத்து வர் முத்துக்குமரன் விளக்கினார். ஊராட்சி ஒன்றிய தலைவர் பெ.பாலசிங், மருந்து, மாத்திரைகளை வழங்கினார். நிகழ்d Tirunelveli Top Storiesச்சி யில் மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் இராமலெட்சுமி, வார்டு உறுப்பினர் பாக்கிய கனி, மகாரா ஜன், முருகன், கந்தசாமி, பாண்டி, நேரு, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர் மழை: பாபநாசம் அணை நீ்ர்மட்டம் உயர்வு
திருநெல்வேலி, ஜூலை 31- நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாசமழை மணி முத்தாறு அணை, சேர்வலாறு அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கி யது. ஆனாலும் தொடர்ந்து மழை இல்லா ததால் அணைகளின் நீர்மட்டம் உயர வில்லை. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான நீர்ப்பிடிப்பு பகுதி களில் மழை பெய்ததால் நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதன் காரணமாக பாபநா சம் அணை 5 அடி உயர்ந்து 56.60 அடி யாக உள்ளது. அணைக்கு 2750 கன அடி நீர்வரத்து உள்ளது.
தூத்துக்குடி டாக்டர் உயிரிழப்பு
தூத்துக்குடி, ஜூலை 31- தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோ னா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி போல் பேட்டை 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் கல்யாணராமன் (58). இவர் சாயர்புரம் அருகே பண்டாரவிளை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந் தார். கடந்த 28ஆம் தேதி இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்து உள்ளது.
பக்கிள் ஓடை அருகே வீடு இழந்து வீதியில் வசிக்கும் 20 குடும்பங்கள்
ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி, ஜூலை 31- தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அருகே வீடு இல்லாமல் வீதியில் வசிக்கும் மக்க ளுக்கு வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி தபால் தந்தி காலனி முதல் தெரு பக்கிள் ஓடையின் அருகே உள்ள காலியிடங்களில் குடிசை அமைத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். இவ்விடத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றன. இந்நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் பக்கிள் ஓடையின் அருகே நீர்வழிச்சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் எங்களது வீடுகள், குடிசைகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. தற்போது குடியிருப்பதற்கு இடவசதி யின்றி தவிப்பதோடு எங்களது வீட்டு உப யோகப் பொருட்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் வெட்ட வெளியில் கிடக்கின் றன. கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் எங்க ளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நில ஒதுக்கீடு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், சிலர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டனர். எனவே தற்போதைய சூழ லில் குடியிருக்க இடவசதியின்றி தவித்து வரும் இப்பகுதியைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இடவசதி மற்றும் நில ஒதுக்கீடு செய்து உரிய முறையில் எங்களது வாழ்வாதாரங்களை காக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.