tamilnadu

திருப்பரங்குன்றம்: வாக்கு எண்ணிக்கையில் “சொதப்பல்” வேட்பாளர்களையும், முகவர்களையும் டென்சனாக்கிய அதிகாரிகள்

மதுரை, ஜன.2- மதுரை மாவட்ட உள்ளாட்சித் தேர்த லில் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற் கான வாக்கு எண்ணிக்கை வியாழ னன்று திருப்பரங்குன்றம் சீதாலெட்சுமி பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தில் அனைத்து ஒன்றி யங்களிலும் திட்டமிட்டபடி எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை  துவங்கி யது. ஆனால், திருப்பரங்குன்றத்தில் மட்டும் அதிகாரிகள் செய்த குழப்பம், சொதப்பல் காரணமாக ஒரு வழியாக வாக்கு எண்ணிக்கை 11 மணிக்குத்தான் முறையாகத் தொடங்கியது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்பிற்கு பதிவான வாக்குகள்  30-ஆம் தேதி வரை ஒன்பது மேஜைகளில் எண்ணப்படும் என அறி விக்கப்பட்டது. 31-ஆம் தேதி 11 மேஜை கள் என இறுதியாக அறிவிக்கப்பட் டது. இதையடுத்து போட்டியிட்ட வேட்பா ளர்கள், முகவர்கள் 11 பேர் எண்ணிக் கைக்கு தயாராகிச் சென்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற் குச் சென்றபின் தேர்தல் அதிகாரி வேட்பாளர்கள், முகவர்களிடம் “குண்டைத்” தூக்கிப் போட்டுள்ளார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாக்கு எண்ணிக்கை 21 மேஜைகளில் நடை பெறும் என அறிவித்துள்ளார். இதைக் கேட்ட வேட்பாளர்களும், முகவர் களும் அதிர்ச்சியடைந்தனர். 21 மேஜைகளில் எண்ணப்படும் என்ற முடிவு எங்கே, எப்போது எடுக்கப்பட் டது? என கேள்வியெழுப்பினர். தேர்தல் அதிகாரி தெளிவான பதிலை அளிக்கா மல் குழப்பிக்கொண்டேயிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் (17-வது வார்டு) மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிட்ட செ.முத்துராணி மற்றும் முகவர்கள் தேர்தல் அதிகாரியின் நட வடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த தோடு, தங்களது கட்சியின் சார்பில் கூடு தல் மேஜைகளுக்கு முகவர்கள் வந்த பின்தான் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டுமென வற்புறுத்தி னர். இதைத் தொடர்ந்து முகவர்களை அழைத்து வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரமானது. தேர்தல் அதி காரியின் சொதப்பல் குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடே சன் ஆட்சியர் டி.ஜி.வினய் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த முகவர்களும் வந்து சேர்ந்த பின் 11 மணி யளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் முடிவுகளையும் அறி விப்பதில் அதிகாரிகள் குழப்பத்தின் உச்சியில் இருந்தனர். 1-ஆவது வார்டு ஒன்றிய வார்டு உறுப்பினர் பொறுப் பிற்கு பஞ்சாட்சரம் (திமுக), 2-ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு உஷாராணி (திமு), 3-ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு லெட்சுமி (திமு), 4-ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு ஆசைத்தம்பி (சுயேட்சை), 5-ஆவது வார்டு உறுப்பி னர் பொறுப்பிற்கு மணிமாறன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றதாக ஒரு வழி யாய் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

;