கொரோனா காலத்தில் பல விழாக்களை கொண்டாட முடியாத நிலையிலிருந்த மக்கள் தற்போது கொரோனா பரவல் பாதிப்பும் ஊரடங்கும் தளர்ந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உளப்பூர்வமாக விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு, கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் நகரங்களின் கடைவீதிகளில் தெரிகிறது. கடந்த ஆண்டு இருந்த அளவிற்கு மக்களிடையே வாங்கும் சக்தியோ, வியாபாரமோ இல்லை என்ற போதிலும், இந்த தீபாவளியின் மகிழ்ச்சியை தங்களது சிறு சிறு கொள்முதல்களின் மூலம் பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு தீபாவளியன்றும் மக்கள் கூட்டத்தால் திணறும் மதுரை நேதாஜி ரோடு, வெள்ளியன்றும் அந்தக் காட்சியை தக்கவைத்துக் கொண்டது.