tamilnadu

img

உலகின் மிகப் பெரிய மின்சாரப் பயணிக் கப்பல்

உலகில் கப்பல்களில் பலவிதங்கள் உள்ளன. டைட்டானிக் போன் றவை புகழ்பெற்றும்விட்டன. ஆனால், சீனாவில் மின்சாரம் மூலம் இயங்கும் பயணிகள் கப்பல் பயன்பாட்டுக்கு தயாராகி விட்டது. சீனாவின் யாங்சி ஆற்றின் மூ-மலை பள்ளத்தாக்கு காட்சி இடத்தில் அண்மையில் முதலாவது மின்சாரப் பயணிக் கப்பல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்பட்டது. 100 மீட்டர் நீளமுடைய இக்கப்பல், உலகின் மிகப் பெரிய மின்சாரப் பயணிக் கப்பலாகும். இதன் மூலம் 1300 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். 7500 கிலோவாட் இயக்காற் றல் கொண்ட மின்கலன்கள் இக்கப்பலில் பொருத்தப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.