tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்

வணிகவரித்துறை இணை ஆணையர் எஸ்.கோபால சுந்தரராஜ் ஊழியர் விரோத போக்கோடு நடப்பதாக கூறி வியாழனன்று (ஜூன் 1) சென்னை நந்தனத்தில் உள்ள அவரது அலுவலகத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகவரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.