tamilnadu

img

மோசடி நபர்களிடம் வங்கிகளை ஒப்படைப்பதா?

சென்னை, டிச. 4- வங்கியில் பணம் பெற்று மோசடி யில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களி டமே வங்கியை ஒப்படைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார். ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை தற்போது நடை பெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வருவதை கை விடக் கோரி வங்கி தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சனிக் கிழமை (டிச. 4) தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் கிருபா கரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனத்தின் மாநிலச் செய லாளர் என்.ராஜகோபால், சி.பி.கிருஷ்ணன், காப்பீட்டுக் கழக தென் மண்டல துணைத் தலைவர் கே. சுவாமிநாதன், சுப்பிரமணியம் (எச்.எம்.எஸ்), ராதாகிருஷ்ணன் (ஏஐ டியுசி), சேகரன் (அதிகாரிகள் சங் கம்), முன்னாள் அதிகாரிகள் சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோ, சேவி யர் (ஐஎன்டியுசி) உள்ளிட்ட பலர் பேசினர். இந்த போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த சி.எச். வெங்கடாச்சலம்,“தேசத்தின் அடிப் படை முன்னேற்றத்திற்கு பெரிய உதவி செய்து வரக்கூடிய பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடிய ஒரு மசோதா வை நடப்பு நாடாளுமன்ற தொடரிலே கொண்டு வரப்பட உள்ளதாக ஒன் றிய அரசு அறிவித்துள்ளது” என் றார். தொடக்கத்தில் 8 ஆயிரம் பொதுத்துறை வங்கிக் கிளைகள் இருந்த நிலையில் தற்போது 1 லட் சத்து 18 ஆயிரம் கிளைகள் உள்ளன.

கிரமப்புறங்களில் பொதுத்துறை வங்கிகளால்தான் சேவை அளிக்க முடியும். கடந்த காலங்களில் தனி யார் வங்கிகள் ஏழை எளிய மக்களின் பணத்தை மோசடி செய்து ஏமாற்றி னார்கள். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் அவர்களின் பணத்திற்கு பாதுகாப்பு உள்ளது. எனவே பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறத்தினார். பெரு நிறுவனங்கள் வாங்கிய கடனை வசூலிக்காமல் ரத்து செய்த தினால் பொதுத்துறை வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை கார ணமாகக் கூறி வங்கிகளை தனியாரி டம் ஒப்படைக்கலாம் என அரசு கூறு கிறது. தனியார் நிறுவனங்கள்தான் வங்கியை ஏமாற்றிக் கொண்டிருக்கி றார்கள். இப்போது அவர்களிடமே வங்கியை ஒப்படைப்பதா?. தனியாரி டம் ஒப்படைத்தால் கிராமப்புற சேவை பாதிக்கப்படும். மக்களின் வைப்புத் தொகைக்கு வட்டியை குறைத்து விடுவார்கள். விவசாயத் திற்கு, ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்க முன்வர மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

;