tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

எதிர்பார்க்கப்பட்ட அம்சம்  கூகுள் மெசேஜஸ்-இல் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் இருப்பது போன்று, கூகுள் மெசேஜஸிலும், மெசேஜ்களை நீக்கும் ‘Delete for Everyone’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் மெசேஜஸ் உரையாடலில் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (Rich Communication Services) சாட்களை  நீக்கும் அம்சமான ‘Delete for  Everyone’ என்ற அம்சத்தை கடந்த மார்ச் மாதத்தில் சோதனை செய்து வந்தது. இதனை தொடர்ந்து, இந்த அம்சம் தற்போது பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.  நம்முடன் சாட் செய்பவரின் சாதனங்களில் மெசேஜ்களை நீக்குவதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 15 நிமிடங்களுக்கு பிறகு, பயனர்கள் தங்கள் சொந்த சாதனங்களில் மட்டுமே மெசேஜ்களை நீக்க முடியும். இந்த அம்சம் புதிய கூகுள் மெசேஜஸ் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும், வணிகம் சார்ந்த ஸ்பேம் மெசேஜ்கள் மற்றும் பிற தேவையற்ற மெசேஜ்கள் வருவதை தடுக்க, கூகுள் மெசேஜஸ்-இல் “unsubscribe” அம்சமும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஏர்போட்கள், வாட்ச்களில் கேமரா வர போகிறதா?

ஆப்பிள் தனது ஏர்போட்கள் மற்றும் வாட்ச்களில் கேமராக்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் தனது இந்த கேமரா பொருத்தப்பட்ட ஏர்போட்கள் மற்றும் வாட்ச் மாடல்களை 2027  ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கேமரா புகைப்படம் எடுப்பதற்காகவோ அல்லது வீடியோ அழைப்புகளுக்காகவோ சேர்க்கப்படவில்லை என்றும், அவை சாதனத்தில் உள்ள AI அம்சங்களை இயக்கும் காட்சித் தரவுகளை (visual data) சேகரிப்பதற்கும், ஏர்போட்கள் vision Pro சாதனத்துடன் இணைக்கப் படும்போது இடம்சார்ந்த ஆடியோக் களை மேம்படுத்தவும் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபேட்களுக்கான பிரத்யேக ஜெமினி செயலி அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஓஎஸ்-களுக்கான பிரத்யேக ஜெமினி செயலியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செயலியில், முழுத்திரை (Fullscreen)  அனுபவம், Landscape மற்றும் Portrait Mode உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னதாக ஐஓஎஸ் இயங்கு தளங்களுக்காக வழங்கப்பட்டிருந்த செயலியை ஐபேட்-இல் பயன்படுத்தும்போது, அதில் முழுத்திரை அனுபவம் இல்லை.  மேலும், இந்த புதிய செயலியில் user interface மேம்படுத்தி  வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ஜெமினி லைவ் இண்டர்ஃ பேஸும் இப்போது முழுத்திரையில் கிடைக்கிறது. அதுமட்டு மின்றி, ஐபேடில் ஒரே திரையில் இரண்டு செயலிகளை பயன்படுத்த உதவும் ஸ்பிளிட் வியூ (Split View) அம்சமும்  இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெமினி ஐபேட் செய லியை இப்போது ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.