பட்டா வழங்கல், இனச்சான்று, கல்வி உரிமைகள் வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டம்
வன உரிமைச் சட்டம் முறையாக அமலாகவில்லை; பழங்குடியினர் உரிமைகள் பாதிப்பு
வன உரிமைச் சட்டத்தை முழுமை யாக அமலாக்க வேண்டும், அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண் டும், அரசுப் பணிகளில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து வகையான பழங்குடி மக்களுக்கும் இனச்சான்று காலதாமதமின்றி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னையில் பிப்ரவரி 24 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெ.சண்முகம் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “2006-ல் இயற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் தமிழகத்தில் முறையாக அமலாக்கப்படவில்லை. இதனால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட