கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சென்னை: அரசு மருத்துவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அவர்கள் எப்படி அச்சமின்றி சிகிச்சை அளிக்க முன்வருவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணா தனது மூத்த மகன் பிரசன்னாவிற்கு முதுகுதண்டுவட சிகிச்சை யில் கவனக்குறைவு காரணமாக ஒரு கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவின் விசாரணையில் இந்த கருத்து தெரி விக்கப்பட்டது. நீதிபதி எம்.தண்டபாணி முன் நடந்த விசாரணையில், “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்காக வந்து செல்வதாக வும், அங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு எதிராக இது போன்ற வழக்கு தொடர்ந்தால், அவர்கள் எப்படி அச்சமின்றி சிகிச்சை அளிக்க முன் வருவார்கள்” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். “மருத்துவத் துறையில் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு” எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
மருத்துவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
சென்னை: மூக்கடைப்பு சிகிச்சையின் போது மருத்துவ அலட்சியம் காரணமாக பெண் மூளைச்சாவு அடைந்து உயிரி ழந்த வழக்கில், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. 2005 இல் வடபழனி விஜயா மருத்துவமனையில் எண்டோஸ்கோபி பரிசோதனையின் போது தேவேந்திரா (38) மூளைச்சாவடைந்து இறந்தார். இது தொடர்பாக அவரது கணவர் போஜய்யா தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆர்.சுப்பையா “உணவுக்குப் பின் 6 மணி நேர இடை வெளியை கடைப்பிடிக்காமை, நோயாளியின் சர்க்கரை அளவு மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் குறித்து கருத்தில் கொள்ளாமை” ஆகியவை மருத்துவ அலட்சியம் என்று தீர்ப்ப ளித்தார். அறுவை சிகிச்சை நிபுணர் ம.ஜெயராமி ரெட்டி மற்றும் மயக்கவியல் நிபுணர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் இழப்பீடும், ரூ.50,000 வழக்குச் செலவையும் 8 வாரங்களில் வழங்க உத்தரவிடப்பட்டது.
ரூ.1010 கோடி இழப்பு
சென்னை: 2025 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் கிரைம் மோசடியில் ரூ. 1010 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரி வித்துள்ளனர். கடந்த 7 மாதங்களில் 88,479 புகார்கள் பெறப்பட் டுள்ளன. இழந்த பணத்தில் ரூ. 314 கோடியை சைபர் கிரைம் முடக்கி இருப்பதாகவும், ரூ.62 கோடியை மீட்டு புகார்தார ரிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.'
சென்னைக்குள் நவோனியா கும்பல்
சென்னை: சென்னைக்குள் மிகப் பயங்கரமான நவோனியா திருட்டுக் கும்பல் புகுந்திருப்பதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நவோனியா திருட்டுக் கும்பல் என்பது, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இளை ஞர்கள். இவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளுக் குள் நுழைந்து, பொருட்களை கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மிகப் பயங்கரமான திருட்டுக் கும்பல்களில் ஒன்றாக அடையாளம் காணப்ப டும் நவோனியா திருடர்கள், சென்னைக்குள் நுழைந்திருப்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்திருப்பதையடுத்து, சென்னை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.