tamilnadu

img

“பெற்றெடுத்த உள்ளம்! பேசுகின்ற தெய்வம்!!’ - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

“என் குழந்தைகள் விற்பனைக்கு அல்ல; அவர்களை என்னிடம் ஒப்படையுங்கள்”, என்று நீதிபதியிடம், போர்சுக்கல் பெண்ணொருத்தி கதறுகிறாள். இடம் லண்டன் நீதிமன்றம். இங்கிலாந்து 2014ல் கட்டாயத் தத்தெடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியது.இச்சட்டத்தின் கோரப்பிடியில் மாட்டிக்கொள்ளும் ஒரு போர்ச்சுக்கல் தாய்; அவள் தன் மூன்று குழந்தைகளை மீட்டெடுக்க நடத்தும் போராட்டத்தை விவரிக்கும் கதையே, 2020ல் வெளிவந்த “LISTEN” என்றத் திரைப்படம்.

லண்டன் புறநகர்ப் பகுதியில் வசிக்கும்  தம்பதி பெலா,ஜோடா. பிழைப்புத் தேடி  வந்துள்ளவர்கள். இவர்களுக்கு 12 வய தில் டீகோ என்ற ஒரு மகன்.12 மாதக் கைக்குழந்தை ஜெஸ்ஸி; 5 வயது லூசியா  செவித்திறனற்ற,பேசமுடியாத பெண் குழந்தை.இரத்தநாள கசிவு நோய் காரணமாக, முதுகுப் பகுதியில் அவ ளுக்குச் சிவப்புத் தழும்புகள் தோன்று கின்றது. மர அறுவை மில்லில் அற்றைக் கூலிக்கு வேலை பார்க்கும் ஜோடாவுக்கு  மூன்று மாத சம்பளப் பாக்கி.அதனால்  சம்பளப்பாக்கியைத் தந்துவிட்டு மடிக்கணினியைப் பெற்றுக் கொள்ளலாம்  என்றுசொல்லி ஆலை உரிமையாளரிடமி ருந்துப் பறித்துக் கொள்கிறான். வேறு வேலையின்றி இருக்கிறான். வீடுகளில் துப்புரவு வேலை பார்க்கும்  பெலாவுக்கு அற்ப சொற்பமான வரு மானம். சூப்பர் மார்க்கெட்டில் ரொட்டி திருடுவது போன்று அவ்வப்போது சில  தப்பான வழிகளில் குடும்பத்தினர் பசியை  ஆற்றுகிறாள். இங்கிலாந்தில் அரசு ஆதரவுடன் சமூக  சேவை அமைப்புகள் செயல்படுகின்றன. இவை வந்தேறிகள், அகதிகள் குடும்  பங்களில் உள்ள இளைஞர்கள்,

குழந்தை கள், பாதுகாப்பாக இருப்பதையும், அவர்  கள் பெற்றோர்களால் புறக்கணிக்கப்படா மலும், தவறாக வழிநடத்தப்படாமலும் இருப்பதைக் கண்காணிக்கும் அமைப்பா கும். மேலும் ஆதரவு தேவைப்படும் குழந் தைகளுக்கு சேவைகளை வழங்குவதும் இவற்றின் முக்கியப்பணியாகும்.  சிறுமி லூசியாவின் காது கேட்க உத வும் கருவி பழுதாகிவிட,புதியது வாங்க வழியில்லாததால், இக்கருவியின்றி பள்ளிக்கு அனுப்பப் படுகிறாள்.கருவி இல்லாமல் பள்ளிக்கு வந்ததால் நிர்வாகம் கோபமடைகிறது.மேலும் லூசியாவின் முதுகில் சிவப்புத் தழும்புகளை கண்ட பள்ளி நிர்வாகம்,அவளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புகிறது. பெற்  றோர்கள் இக்குழந்தையை ஒழுங்காக  பராமரிக்கவில்லை என முடிவெடுக்கிறது.சமூக சேவை அமைப்புக்கு புகார் அளிக்கிறது.  புகாரின் பேரில் சமூக சேவை அதிகாரி கள், பெலா,ஜோடா முன்னிலையில், வீட்  டிற்குள் நுழைந்து, மூன்று குழந்தைகளை யும், பெற்றோர்களிடமிருந்து பிரித்து கூட்டிச் செல்கிறார்கள்.

குழந்தைகளை மீட்க,ஆனி பெய்ன் என்ற பெண் சமூகப் போராளியின் உதவி யை நாடுகிறார்கள். பெலா, ஜோடா மற்றும் ஆனி இணைந்து  குழந்தைகளை மீட்கப் பல்வேறு வழி களில் முயற்சி செய்கிறார்கள்.அவர்களது விடாமுயற்சி வெற்றிபெற்றதா? என்பதை  துயரம், தவிப்பு மகிழ்ச்சி என்ற உணர்ச்சிக்  கலவையுடன் விவரிக்கிறது மீதிப்படம். நீதிமன்றத்தில் பெலா தன்னை நல்ல  தாய் என்றும்,எவ்வித தவறும் செய்யா தவள் என்றும் கூறுகிறாள்.ஆனால் இவள்  பசிக்காக ரொட்டியை திருடுகிறாள்.ஜோடா சம்பளம் தராத முதலாளியின் மடிக்கணினியைப் பறிக்கிறான். குழந்தை களை கடத்துவது, சட்டத்திற்கு புறம்பா னது எனக் கூறுகிறாள் ஆனி. ஆனால் அவளே, குழந்தை டீகோவை நாடு கடத்து வதற்கு உதவி செய்கிறாள்.ஆக  வாழ்வின் நெருக்கடியே, எண்ணங்க ளுக்கும், செயலுக்குமான முரண்களை உருவாக்கிறது என்பதனை இப்படம் மென்மையாக பேசுகிறது. கட்டாய தத்தெடுப்பு சட்டத்தை பயன்  படுத்தி, லண்டனில் உள்ள சமூக சேவை அமைப்புகள் பெற்றோர், ஒப்புதலின்றி, அவர்களின் குழந்தைகளை அய லார்களுக்கு ஒப்படைக்கும் நடைமுறை களில் உள்ள மோசடிகள் நம்மைப் பதற  வைக்கின்றன.

காட்சி மொழியில் சொல்லப்படும் சினிமா சட்டகத்தை,தேர்ந்த இயக்குநர் எப்படி கையாளுவார் என்பதற்கு முதல்  ஐந்து காட்சிகள் மிக முக்கியகமானது.நிசப்தமான இருள்- பாதி மரக்கிளை களோடு தெரியும் மெல்லிய ஒளிர்வானம்-  பச்சை இலைகள் அசைய,தெரியும் நீல வானம்- சலசலக்கும் குளிர்க்காற்றில் தாழ்ந்த கொடியில் தலைகீழாக உல ரும் பெலா குடும்பத்தினர் உடைகளின்  அருகாமை காட்சி-மற்றும் தூரக்காட்சி என்று கதைக்குள் சொல்லப்படும் வாழ்வி யலை, கவித்துவ குறியீடாக துவக்கத்தி லேயே காட்சி மொழியில் காட்டப்பட்டி ருப்பது அற்புதம். அசைந்தாடும் திரைச்சீலை.

ஆளில்லாத கலைந்த போர்வைகளுடன் கட்டில் மெத்தை. விளையாடத் துணை யில்லாத ஆங்காங்கே கிடக்கும் பொம்மை கள். இம்மூன்று காட்சிகள் மூலம் குழந்தை கள் இல்லாத வீட்டின் வெறுமையை நம்  முன்னே நிறுத்துகிறார்கள். சமூக சேவை மையத்தில் ஊமைக்  குழந்தையோடு போர்ச்சுகல் மொழியில்  உரையாடவும், கை சைகையில் பேசு வதையும் அதிகாரிகள் தடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட கட்டா யப்படுத்துகையில், ஆவேசத்தோடு எதிர்வினையாற்றும் பெலா பாத்திர மேற்றுள்ள லூசியா மோனிஷ் தாயாகவே  மின்னுகிறார். தந்தை ஜோடா பாத்திரமேற்றுள்ள ரூபன் கார்சியாவும்,காது கேளாத லூசியா வாக மைஸி ஸிலியும் சிறந்த நடிப்பைத் தந்துள்ளனர்.அனைத்து கலைஞர்களும் நேர்த்தியாக நடித்துள்ளனர். குழந்தைகளை இழந்த கையறு  நிலையை உணர்த்தும் கருத்தியல் (thematic )இசை, சிறந்த ஒளிப்பதிவு  மற்றும் படத்தொகுப்பு பார்வையாளர் களை ஈர்க்கிறது.”ஆனா ரோஷா” என்ற  பெண் எதார்த்தம் மாறாமல் அற்புதமாக இயக்கியுள்ளார். இப்படம் 2020 வெனீஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது. பிரைம் அமேசான் ஒடிடி தளத்தில் உள்ளது.  உலகமயத்தில் எந்த நாட்டிலும் பிழைப்புத்தேடலாம்.உலகமே ஒரு கிராமம் என்பதெல்லாம் தேன் தடவிய  வார்த்தைகள். ஆனால் வறுமை வாட்டும் நாட்டை விட்டு வெளியேறுவதும், இன்  னொரு நாட்டில் வேலை தேடி வாழ்வதும்  எளிதல்ல; அந்த முயற்சி விரக்தியளிக்கும் வேதனையானது என்பதை இந்தத் திரைப்படம் அழுத்தமாகச் சொல்கிறது.