தூத்துக்குடி, மே 6 வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்கி டக் கோரியும், நீண்டகாலமாக புறம் போக்கு நிலத்திலும் வறண்ட நீர்நிலை புறம்போக்கிலும் குடியிருப் போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கக் கோரியும், கோவில் நிலங்களில் நீண்ட நாட்களாக குடி யிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோ வில்பட்டி, திருச்செந்தூர் கோட்டாட் சியர் அலுவலகங்களில் மனு கொ டுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் கே.சங்கரன், புறநகர் செயலா ளர் பா.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், ஆர். பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சொ.மாரியப்பன், எம்.எஸ்.முத்து, உள்ளிட்ட பொது மக்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் அவர்களிடம் சுமார் 379 கோரிக்கை மனுக்கள் வழங்கப் பட்டன.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கோவில்பட்டி நகர செயலாளர் எல்.பி.ஜோதி பாசு (எம்சி) தலைமை வகித்தார். கோவில்பட்டி ஒன்றியச் செயலா ளர் தெய்வேந்திரன், விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் ஜோதி, எட்டை யபுரம் தாலுகா செயலாளர் மணி, கயத்தாறு தாலுகா செயலாளர் சாலமன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சீனிவாசன் (எம்சி), ரவீந்திரன், புவி ராஜ் உட்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். பின்னர் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணனிடம் சுமார் 450 கோ ரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. அதே போல் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு திருச் ச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூமயில், அப்பா துரை, மாவட்டக்குழு உறுப்பினர் காசி, உடன்குடி ஒன்றிய செயலா ளர் ஆறுமுகம், திருவை குண்டம் ஒன்றியச் செயலாளர் நம்பி ராஜன், ஆழ்வார் திருநகரி ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், சாத்தான் குளம் ஒன்றியச் செயலாளர் சேசு மணி மற்றும் பொதுமக்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் கோட் டாட்சியரிடம் 300 மனுக்கள் அளிக்கப் பட்டன.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வீட்டு மனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாபெரும் மனு அளிக்கும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஆர். செல்லசுவாமி தலைமை வகித்தார். மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர் முகமது, மாநில குழு உறுப்பினர் லீமாறோஸ், முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். அந்தோணி, என். எஸ். கண் ணன், கே.தங்கமோகன் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் திரளாக பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.