tamilnadu

img

மதுரைக்கு வந்த தேஜஸ் ரயில் பயணிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற சு.வெங்கடேசன் எம்.பி.,...

 மதுரை:
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரைக்கு ஞாயிறன்று வந்த தேஜஸ் ரயில் பயணிகளை இனிப்புவழங்கி வரவேற்றார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்த 4ஆம் தேதி தென்னக ரயில்வே மதுரை -சென்னை இடையேயான தேஜஸ் விரைவு ரயிலைரத்து செய்வதாக அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதினேன். மதுரை- சென்னை இடையே பகல்நேர விரைவு வண்டிகள் இயக்கப் பட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறோம்.

ஆனால் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயிலை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். ரயிலை தற்போது நிறுத்துவதற்கு நீங்கள் கூறும்காரணம், 30 சதவீத பயணிகள் மட்டுமேவருகிறார்கள் என்றார். 30 சதவீதம் பயணிகள் வந்தால் அந்த ரயில் நிறுத்தப் படும் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை .ஏனென்றால் ரயில்வே என்பது மக்களுக்கான ஒரு சேவைத்துறை. அதில் லாபம் என்பதை ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கக் கூடாது. அரசே இதுபோன்ற பெரும் நோய் தொற்று காலத்தில் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்ற வேளையில் அதிகப்படியான பயணிகளை ரயில்வே துறை நிர்வாகம் எதிர் பார்ப்பது ஏற்புடையதாக இல்லை. எனவே தேஜஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மத்திய அரசும் தென்னக ரயில்வே துறைநிர்வாகமும் ஞாயிறு முதல் அந்தரயிலை இயக்குவதாக அறிவித்திருந் தது. அதனடிப்படையில் சென்னையிலிருந்து இன்று வந்த பயணிகளை வரவேற்கும் வகையில் அவர்களுக்கு இனிப் புகள் கொடுத்து வரவேற்றுள்ளோம். மேலும் ரயில்வே துறை நிர்வாகத்திற்கும் மத்திய அரசிற்கும் இதன் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என் றார். 

மூன்று கோரிக்கைகள்

மேலும் அவர் கூறியதாவது:
அதேபோல் தேஜஸ் ரயில் என்ற பெயரை தமிழ் சங்கம் ரயில் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து பேசி வருகிறேன். இதுகுறித்து ரயில்வே துறை நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அதை விரைவில் பேசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை நிர்வாகமும் மத்தியஅமைச்சகமும் முடிவு செய்ய வேண்டும். மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும்ரயில்வே துறை நிர்வாகத்திற்கு மூன்றுகோரிக்கைகளை இதன் மூலம் வைக்கின்றேன். ஒன்று தேஜஸ் ரயில் காலையில் 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்புகிறது. பொதுமக்கள் வீட்டிலிருந்து4. 30  அல்லது 5. மணிக்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்நேரத்தில் வேறு பொது போக்குவரத்து வசதி குறைவு. எனவே பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இரண்டாவது தாம்பரம் மற்றும்  திண்டுக்கல்லில் இந்த ரயில் நின்று செல்ல வேண்டும். மூன்று மற்ற ஏசிரயில்களை ஒப்பிடும்போது பயணச்சீட்டுகட்டணம் மிக அதிகம்.

குறிப்பாக வைகைஎக்ஸ்பிரஸ் ரயிலில் 630 ரூபாய் குளிர் சாதன வசதி பெட்டியில் செல்வது என்றால்தேஜஸ் ரயில் 900 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கின்றது.  மூன்றில் ஒருமடங்கு கட்டண உயர்வு. எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும். அடுத்து தேஜஸ் என்ற பெயரை தமிழ்ச்சங்கம் என்று மாற்றவேண்டும். இந்த கோரிக்கைகளையும் மத்திய அரசும் ரயில்வே துறைநிர்வாகமும் உடனடியாக சரி செய்துவிட வேண்டும்.அதேபோல் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்கள் என்று கூறி அதன் எண்களை மட்டுமே கூறி வருகிறார்கள். அனைத்து ரயில்களுக்கும் சிறப்பான தமிழ் பெயர்கள் உள்ளது. அதை கூறிவண்டியின் எண்களை சொல்ல வேண்டும். இல்லை என்றால் இது மக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். எந்த ரயில் எப்போது கிளம்பும் என்ற குழப்பத்தில் அவர்கள் நிற்கிறார்கள்.எனவே ரயில் எண்களை சொல வதை தவிர்த்து வண்டி பெயர்களை முறையாக அறிவித்து அறிவிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இரா. விஜயராஜன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் மற்றும் ரயில்வேத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

;