மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் சேலத்தில் திங்களன்று மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் துவங்கியது. இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி. சம்பத், மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.