tamilnadu

img

மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

தென்காசி ஆட்சியருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

திருநெல்வேலி, ஆக.14- மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென தென்காசி ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டச் செயலா ளர் கே.ஜி.பாஸ்கரன் வலியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து அவர், ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்ட மக்க ளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகளையும், சக்திகளை யும் கட்டுப்படுத்த உரிய சட்டரீதி யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2018ம் ஆண்டு விநாய கர் சதுர்த்தி விழாவின் போது செங் கோட்டை நகரில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதை யும், தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் தாக்கப்பட்டதை யும், சேதப்படுத்தப்பட்டது.

இறை வழிபாடு என்பது அனை வருக்கும் நல்வாழ்க்கை ஏற்பட வேண்டுமென்றும், பொது அமைதி நிரந்தரமாக நிலவ வேண்டும் என்பதற்காகத் தான் நடைபெறும்.  கூட்டு வழிபாடும் அத்தகு பாகு பாடற்ற, ஏற்றத்தாழ்வற்ற பொது நிகழ்வாகத் தான் பன்னெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. சமய வேறுபாடுகளை கடந்து இந் நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்று வருகிறார்கள். ஆனால் 2018ம் ஆண்டு செங்கோட்டை நகரில்  தீய நோக்கத்தோடு, மக்கள் ஒற்று மைக்கு சேதம் ஏற்படுத்தும் நோக் கத்தோடும், குறுகிய அரசியல் நோக்கோடும் சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்றன. 

இந்த ஆண்டு கொரோனா நோய் பரவாமல் தடுக்க, தமிழக அரசு  விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்டாடிட வேண்டுமெனவும், பொது இடங் களில் சிலை வைப்பது ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய் யப்பட்டுள்ளது என்றும் அறி வித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவராலும் வரவேற்கக் கூடி யது. அதே நேரத்தில் மாநில அரசு ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டு வந்துள்ள இந்த தடையை மீறப் போவதாக சில செய்திகள் வரு கிறது. இவ்வாறு செய்வது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உரு வாக்கி ஒரு பதற்ற நிலையை ஏற் படுத்தும். தடையை மீறி விநாய கர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அமைப்புகள் மீது அரசு உறுதியான நடவடிக்கை யை மேற்கொண்டிட வேண்டும்.  மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில், உள் நோக் கத்தோடும், குறுகிய அரசியல் நோக்கத்தோடும் மத அடிப்படை யிலான விழாக்களை திசைதிருப் பும் மக்கள் விரோத சக்திகளை தனிமைப்படுத்தி வேற்றுமையில் ஒற்றுமை எனும் தேசத்தின் பாரம் பரிய மக்கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஜனநாயக, முற்போக்கு சக்திகள், இயக்கங் கள் ஒன்றுபட்டு, மக்களை பிளவு படுத்தும் சக்திகளை தனிமைப் படுத்தி, ஒற்றுமைக்கு வலுசேர்க் கும் வகையில் ஒன்றுபட்டு செய லாற்ற வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

;