சென்னை, ஏப். 17- முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டியில் விளையாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவவேண்டும் என நீச்சல்வீராங்கனை தனுஜா கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு இலங் கையில் இருந்து தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் விஜயகுமார் அருள்ஜோதி தம்பதியின் மகள் தனுஜா. இவர் 5 வயது முதலே பல்வேறு நிச்சல் போட்டிகளில் பங்கேற்று மாநில, தேசிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் அகதி என்பதை காரணமாகக் கூறி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியிலும், அமெரிக்காவில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்க, அனுமதி மறுக்கப் பட்டது. இந்நிலையில், இது குறித்து செய்தி யாளர்களை சந்தித்த அவர்,இந்தஆண்டு நடைபெறும் முதல மைச்சர்கோப்பைக்கான விளை யாட்டு போட்டியில் தன்னை அனு மதிக்க உதவ வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார். மேலும், என்னை இப்போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தால் இந்திய அளவில் நடைபெறும் போட்டி களிலும், உலக அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளிலும் நான் வெற்றி பெற்று இந்தியாவிற்கும் உல கெங்கும் உள்ள தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் செயல் படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.