tamilnadu

img

ஊதியத்தைக் குறைப்பதா? ஸ்விக்கி ஊழியர்கள் ஆவேசம்

சென்னை, செப். 22- ஸ்விக்கி ஊழியர்களின் பணி  மாறுதல் மற்றும் ஊதிய குறைப்பு மற்றும் வேலை பறிப்பு நட வடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழி யர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழ னன்று (செப். 22) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் இதர வீட்டு பொருட் களை கொண்டு சென்று விநியோ கிக்கும் ஸ்விக்கி நிறுவனத்தில் சுமார் 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஊழி யர்களுக்கு வேலைக்கான ஆணை யும், பணி நிலைமைகள், சமூக பாதுகாப்பு, சட்ட பலன்கள் இல்லை.  இந்த நிறுவனம் இதுவரை வழங்கி வந்த ஊதிய முறையை மாற்றி அமைத்து புதிய ஊதிய நடைமுறையை அமல்படுத்தி யுள்ளது. இதனை அமலாக்கம் செய்தால் ஏறத்தாழ 50 விழுக்காடு ஊதியத்தை ஊழியர்கள் இழக்க நேரிடும். இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சும் ஸ்விக்கி நிர்வாகத்திற்கு அரசுகளும் துணை போகிறது. கோடிக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை அந்நிய நிறுவனங்கள் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

பழைய ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும். பழைய திட்டத்தில் இருந்து வந்த தினசரி  மற்றும் வாராந்திர ஊக்கத் தொகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் வழங்கி வந்த மாதாந்திர ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். இந்திய தொழிலாளர் சட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சி.திருவேட்டை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழியர் சங்கத்தின் தலைவர் கோபிகுமார், பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தயாளன், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட த்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.