tamilnadu

பெண் ஊழியர்களை கருத்தில் கொண்டு இடமாற்றக் கொள்கையை உருவாக்க வேண்டும்

புதுதில்லி,மார்ச் 12-  பெண் ஊழியர்களை கருத்தில் கொண்டு இடமாற்றக் கொள்கையை  கருணை அடிப்ப டையில் உருவாக்க வேண்டும் என்று  அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஆணையங்களுக்கு இடையேயான இட மாற்றங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை வெள்ளியன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடை பெற்றது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட மறுத்து விட்டனர்.  பின்னர் நீதிபதிகள் கூறுகையில்,  அரசு அலுவலகங்களில் இட மாற்றங்கள் இருக்கலாம். அது அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்தவை. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் இடமாற்றக் கொள்கைகள் உருவாக்கப்படும்போது பெண் ஊழியர்களையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் தயாரிக்க வேண்டும். அந்த கொள்கைகள் கருணை யுடனும், இரக்கத்துடனும் அமைய வேண்டும். பெண் ஊழியர்கள் வீடுகளில் முதன் மைப் பராமரிப்பாளர்களாக இருப்பதால், சம மற்ற பணிச்சுமையைப் பகிர்ந்து கொள் கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சமூகம் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கணிசமான சமத்து வத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசு களுக்கு பரிந்துரைக்கிறோம். இடமாற்றக் கொள்கைகளை உருவாக்கும் போது அரசுகள் இந்த அம்சத்தை மனதில் கொள்ள வேண்டும் என்று  தெரிவித்தனர்.