ஆண்டிமடத்தில் சந்தா சேகரிப்பு
அரியலூர், ஜூலை 29- ஆண்டிமடம் கூட்டத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம், ஒன்றியச் செயலாளர் எம்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம் ஆகியோர் தீவிர சந்தா சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஆண்டிமடம் கடைவீதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தனசிங்கிடம் ஆண்டு சந்தா பெறப்பட்டது.