tamilnadu

img

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராட்டம்

எம்எல்ஏ விழிப்புணர்வு  பேச்சு

தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சித்த மருத்துவப்பிரிவு நல வாழ்வு மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.  நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து, பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் மா.கோவிந்தராசு பேசியதாவது, “கொரோனா இன்று உலகெங்கிலும் பெரும் அச்சுறுத்தலாக மாறி விட்டது. இன்றைக்கு நடப்பது, மனிதனோடு மனிதனோ, ஆயுதத்தோடு ஆயுதமோ நடத்தும் போர் அல்ல. கண்ணுக்கு தெரியாத எதிரியான, முகம் தெரியாத வைரஸோடு, முகக்கவசம் அணிந்து போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக  முதலமைச்சர் சொன்னது போல, தனித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டிலிருப்போம். கொரோனா வைரஸ் குறித்து பீதி யடைய வேண்டாம். எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டால் போதும். முகக்கவசம் அணிவதோடு, கைகளை அடிக்கடி சோப்பிட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றி, விழிப்புணர்வோடு செயல்பட்டால் கொரோனா என்ற கொடிய அரக்கனை வெற்றி கொள்ளலாம்” என்றார்.  விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வனஜா தலைமை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் கவிபாரதி வரவேற்றார். முன்னாள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, 20 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி மருந்து பெட்டகங்களை எம்எல்ஏ வழங்கினார்.

கொரோனா வைரஸ் குறித்து பீதி யடைய வேண்டாம். எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டால் போதும். முகக்கவசம் அணிவதோடு, கைகளை அடிக்கடி சோப்பிட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றி, விழிப்புணர்வோடு செயல்பட்டால் கொரோனா என்ற கொடிய அரக்கனை வெற்றி கொள்ளலாம்” என்றார்.  விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வனஜா தலைமை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் கவிபாரதி வரவேற்றார். முன்னாள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, 20 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி மருந்து பெட்டகங்களை எம்எல்ஏ வழங்கினார்.