தூத்துக்குடி, மே 19-ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஞாயிறு காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர் . இத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா, அயிரவன்பட்டி கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். அப்போது, மின்அழுத் தம் குறைவாக இருந்ததால் வாக்குச்சாவடி இருட்டாக இருந்தது. ஆகவே வாக்காளர்கள் வாக்களிக்க இயலாமல் சிரமப்பட்டனர். அப்போது தேர்தல்அதிகாரி தனது கையில் சிறிய டார்ச்லைட் வைத்து கொண்டு வாக்காளர்களிடம் கையெழுத்து வாங்கி விட்டு பின்னர்வாக்காளர் கையில் அந்த லைட்டைகொடுத்து வாக்குப்பதிவு செய்யுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் டார்ச்லைட் என்பதால் தேர்தல்அதிகாரியின் நடவடிக்கைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சண்முகையா பேட்டி
பின்னர் அருகிலுள்ள ஒருவீட்டிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு மின்இணைப்பு கொடுக்கப் பட்டது. அதன் பிறகு திமுக வேட்பாளர் சண்முகையா, தனது வாக கினை பதிவு செய்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்த அதிகாரிகளும் அமைச்சர் கடம்பூர்ராஜு சொல்வதை கேட்டு மின்சாரத்தை தடை செய்துள்ளனர். இருப்பினும் வாக்காளர்கள் பொறுமையாக வாக்களித்து வருகின்றனர். இதனால் என் வெற்றியைபாதிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளை கண்டிக்கிறேன்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நல்லாசியுடன், திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, மாவட்டச் செயலாளர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில்எனது வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது. நான் 25 ஆயிரம் முதல்50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்.ஒட்டப்பிடாரம் தொகுதியில் காலை முதல் பெண்களை விட ஆண்கள் அதிக ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். சில வாக்குச்சாவடி முன்பு பந்தல் அமைக்காததால் வெயிலில் நின்று பலமணி நேரம் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும் வாக்களிக்க வசதியாக வீல்சேர்கள் அமைத்து ஏற்பாடு செய்து கொடுக்காததால் போலீசார் உதவியோடு மிகுந்த சிரமத்துடன் வாக்களித்தனர். இதில் கவர்னகிரி வாக்குச் சாவடியில் 97 வயது மூதாட்டி ஒருவர் போலீசார் உதவியுடன் கைத் தாங்கலாக அழைத்து வரப்பட்டு தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் 100 வயது பெண் இசக்கியம்மாள் ஓட்டநத்தம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 10 மணிக்கு மேல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. மிக குறைந்தவாக்காளர்களே காணப்பட்டனர்.
வாக்கு இயந்திரம் பழுது
ஒட்டநத்தம் பகுதி வாக்குச் சாவடியில் வாக்கு இயந்திரம் திடீரென பழுதானதால் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட் டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். பழுதான வாக்கு இயந்திரம் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றது .இதுபோல் வாலசமுத்திரம் வாக்குச்சாவடி பூத் எண் 62ல் 70வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரெனபழுதானது. இதனால் அங்கு வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. சுமார் 40 நிமிடம் கழித்து அந்த இயந்திரத்திற்கு சீல் வைத்து விட்டுபுதியதாக வேறு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப் பட்டி, புதுக்கோட்டை, கருங்குளம், வசவப்பபுரம் , வல்லநாடு,தெய்வ செயல்புரம். உட்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும், விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.