மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் “மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு”
(ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை - 5
பல்வேறு மொழிகள் பேசுகிற, கலாச்சாரங்களைப் பின்பற்றுகிற தேசிய இனங்கள் இணைந்து வாழும் நாடு இந்தியா. 1652 பேசுமொழிகள், 234 தாய்மொழிகள், 22 பெருமொழிகள், 9 பெரு மதங்கள், 8 வகையான பெரும் இனக் குடும்பங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் - இவ்வளவு பன்மைத்தன்மை கொண்ட தேசிய இனங்கள் உலகில் ஒரு நிலப்பரப்பில் இணைந்திருப்பது என்பதே மிகப்பெரும் மானுடவியல் அதிசயம்தான்.
கனவுகளோடு ஒன்றிணைந்த தேசிய இனங்கள்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியில் பெரும் சுரண்டலுக்கு உள்ளான இந்தப் பல்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரக் குழுக்கள் விடுதலை வேட்கையினால் ஒன்றுபட்டுப் போராடி, சுதந்திரத்தை வென்றெடுத்து, இந்தியா என்ற நாடா கப் பரிணமித்தன. ஏகாதிபத்தியத் தலையீடு கள் இல்லாமல், தங்களுடைய கூட்டு உழைப்பினால் நாட்டின் வளங்களை பெருக்கிக்கொள்வது, அதன் மூலம் தங்க ளுடைய சமூகப் பொருளாதார, அரசியல், மொழியியல் மற்றும் கலாச்சாரத் தேவை களை பூர்த்தி செய்துகொள்வது, தங்களுக் கான வளமான வாழ்வைக் கட்டியெழுப்பு வது என்ற கனவோடு இந்திய ஒன்றியத்தில் இணைந்தார்கள்.
மாநிலங்களின் ஒன்றியம்
அத்தகைய கனவுகளோடு சுதந்தி ரத்திற்குப் பிறகு நாம் உருவாக்கிய அரசிய லமைப்புச் சட்டமானது, ஒன்றிய-மாநில அரசுகளின் கூட்டாட்சி, மதச்சார்பற்ற ஜன நாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி ஆகிய அடிப்படைகளைக் கொண்டது. இந்தியா “மாநிலங்களின் ஒன்றியம்” என்று அரசியலமைப்புச் சட்டத் தின் முதல் பகுதியிலேயே வரையறுக்கப்படு கிறது. எனவே, கூட்டாட்சி என்பதே இந்தியா வின் அடித்தளம். ஜனநாயகம், பொருளா தார இறையாண்மை, சமூக நீதி ஆகிய மற்ற அடிப்படை அம்சங்களை பாதுகாத்து உறுதிசெய்திட கூட்டாட்சி முறை அவசிய மானதாகும் . கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை யில் கட்டமைக்கப்பட்ட நாடு இந்தியா என்றா லும் சுதந்திரம் பெற்ற காலத்தில் உருவாக் கப்பட்ட அரசியல் சாசனத்தில், பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய தாக்கம், பிரி வினை கோஷம் ஒரு காலமும் தலைதூக்கி விடக் கூடாது என்ற அச்ச உணர்வு - இவற்றின் காரணமாக, ஒன்றிய அரசுக்கே கூடுதலான அதிகாரம் வழங்கிடும் கூறு கள் இடம் பெற்றன. ஒன்றிய அரசுப் பட்டி யல், மாநில அரசுகளின் பட்டியல், இவற் றோடு ஒன்றிய-மாநில அரசுகள் இர டிற்கும் அதிகாரம் உள்ள பொதுப்பட்டியல் என்கிற அதிகாரப் பகிர்வு முறை கூட்டாட்சி முறைக்கு எப்போதுமே சவாலாக இருந்து வருகிறது. மாநிலங்களின் அதிகார வரம் புக்குள் இருக்க வேண்டிய கல்வி போன்ற விவகாரங்கள்கூட பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டது என்பது, மாநில அரசு களின் அதிகாரங்களைக் குறைப்பதற்கே இட்டுச் சென்றுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத ஆபத்து
இந்தப் பின்னணியில்தான், மோடி தலைமையிலான பாஜக சங்பரிவாரங்களின் ஆட்சியில் இன்றைய இந்தியா, முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நெருக்கடி யில் சிக்கித் தவிக்கிறது. குதிரை கீழே தள்ளியது டன் குழியும் பறித்த கதையாக இந்தியாவின் அர சியலமைப்புச் சட்டமும் அதன் அடிப்படையான கூட்டாட்சி முறையும் நொறுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதித்துறை, நிர்வா கம் அனைத்தும் ஆர்எஸ்எஸ்- பாஜகவின் இலக் கான இந்துத்துவா ராஷ்டிரத்தை உருவாக்கு வதற்காக வளைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் மிருக பலத்தை வைத்து ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 -ஆவது பிரிவை ஒழித்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிர தேசங்களாகத் துண்டாடியது மோடி அரசு. தற் போது தன்னுடைய இந்துத்துவ அரசியலுக்காக மணிப்பூரில் இனப்பிரச்சனையைக் கிளப்பி மாநி லத்தையே ரத்தக் களரியாக மாற்றியிருக்கிறது.
‘ஒரு மாநிலத்தில் மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் பரவாயில்லை; எப்படியும் ஆட்சியமைப்போம்’ என்பதுதான் பாஜகவின் அணுகுமுறையாக இருக்கிறது. ‘மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னர்கள் உருவாக்கிய மாநில அரசாங்கங்களைக் கலைப்பதற்கு பிரிவு 356 -ஐ பயன்படுத்த வேண்டி யதில்லை; அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் அனைத்தையும் நாங்கள் பிரயோகிப்போம்’ என அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இறங்கி, மத்தி யப் பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 8க்கும் மேற் பட்ட மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தனது ஆட்சியை செயற்கையாக பாஜக நிறு வியுள்ளது. கர்நாடகாவிலும் இதே வேலையை சென்ற முறை செய்தது. அந்த மாநில மக்கள் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளார்கள்.
மாணவர் சேர்க்கை கூட....
நீட் தேர்வை திணித்ததோடு நில்லாமல் மாநில அரசின் மருத்துவப் படிப்பு சேர்க்கை நிர்வா கத்தைக்கூட ஒன்றிய பாஜக அரசு தனது கையில் எடுத்துக்கொண்டது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பிரத்யேகமான 69 சதவிகித இடஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு வேட்டு வைக்க முயல் கிறது. இந்து சனாதன, கார்ப்பரேட்மயக் கல்விக் கொள்கையை உருவாக்கி அனைத்து மாநிலங் கள் மீதும் வலிந்து திணித்து வருகிறது. சிறுபான் மையினர் மீதான வெறுப்பு, சாதிய ஆதிக்க மன நிலை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூகத் தின் சாபக்கேடுகள் அனைத்தையும் குழந்தைகள் மனதில் வேரூன்ற வைக்க ஏற்பாடு செய்கிறது. விவசாயம், நிலம், மின்சாரம், கூட்டுறவு, பொதுவிநியோகம் என மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் துறைகளை தனது கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகளுக்கு தாரை வார்க்கும் நோக்கோடு அத்துமீறிப் பறித்துக்கொள்ள முயற் சிக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்களே நடத்தாமல் மாநில மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான கொள்கைகள் குறித்த சட்டங்களைத் தன்போக்கில் நிறைவேற்றுகிறது.
நிதி ஆதாரங்கள் முற்றாக பறிப்பு
மாநில அரசுகளின் வரி, நிதி ஆதாரங்களைக் கைப்பற்றுவதன் மூலம் மாநிலங்களை கையேந் தும் நிலைக்கு தள்ளுகிறது. நாடு முழுவதும் ஒற்றை வரிவிதிப்பு என்ற அடிப்படையில் விஞ்ஞா னப்பூர்வமற்ற ஜி.எஸ்.டி வரிமுறையை கொடூர மாக அமலாக்கி வருகிறது பாஜக அரசு. மாநிலத் தின் வரி வருவாய் இனங்களை மிகக் கடுமையாக சுருக்கிவிட்டது. இது தொடர்பாக கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் அவர்கள் தெரிவித்துள்ளதை கவ னத்தில் கொள்ள வேண்டியுள்ளது: “வரி விதிப்பு மற்றும் நிதி பகிர்வு உள்ளிட்ட கொள்கைகளில் ஒன்றிய அரசு மாநிலங்களை எவ்வளவு கசக்கிப் பிழிகிறது என்பதை 15ஆவது நிதி கமிஷனின் ஆய்வறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. அந்த அறிக் கையின்படி நாட்டின் மொத்த வருவாய் இனங்க ளில் ஒன்றிய அரசு 62.7 சதவிகிதத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. ஆனால், அதில் வெறும் 37.6 சதவிகித நிதியையே செலவினங்களுக்காக ஒதுக்குகிறது. மறுபுறம் மாநிலங்களுக்கு 37.3 சதவிகித வருவாய் தான் கிடைக்கப் பெறுகிறது. ஆனால், மாநிலங்களின் தோள்களில் 62.4 சதவிகித செலவினங்களை ஒன்றிய அரசால் ஏற்றப்படுகின்றன. ”
இதுமட்டுமின்றி ஒன்றிய அரசு செஸ் மற்றும் சர் சார்ஜ் ஆகியவை மூலம் பெரும் தொகையினை வருவாயாக ஈட்டுகிறது. உதாரணமாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் செஸ் மற்றும் சர் சார்ஜ் வரி கள் 19.9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இந்த வரி கள் மூலம் சுமார் ரூ.4.5 லட்சம் கோடி வரு வாயினை ஒன்றிய அரசு ஈட்டியுள்ளது. இந்த வருவாயில் மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது என்ற நிலை உள்ளது. இதன்விளை வாக கடுமையான நிதிப்பற்றாக்குறைக்குள் மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன. மக்கள் நலத்திட்டங் களுக்கு, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்றால், நிதிப்பற்றாக்குறையின் கார ணமாக மாநில அரசுகள் சந்தையில் நிதி திரட்ட முடி யாது; மாநில பட்ஜெட்டின் பற்றாக்குறை குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை மாநிலங்களின் மேல் ஒன்றிய அரசு சுமத்துகிறது.
மொழி உரிமை மீது தாக்குதல்
மாநில மக்களின் மொழி உரிமையை மோடி யின் பாஜக அரசு துளிகூட மதிப்பதில்லை. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என மாநில மக்க ளின் மொழி உரிமையைத் தாக்கி வருகிறது. அரசி யல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை மத் திய அலுவல் மொழிகளை மாற்றிட மறுத்து வரு கிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாக இருந்த வர்களை மாநிலங்களின் ஆளுநர்களாக நிய மித்து, அவர்கள் மூலமாக மாநில உரிமைகளை கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளு நர்கள் மூலமாக ஆட்சி நடத்த முயல்கிறது. தமிழ் நாட்டிற்கு பாஜக அரசு நியமித்த ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் மக்கள் போராடிப் பெற்ற மாநி லத்தின் ‘தமிழ்நாடு’ என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்றார். சனாதனம்தான் இந்தியா முழு மைக்கும் பொருத்தமானது என்று தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி மாநில மக்களைத் துன்புறுத்தும் வேலை யில் ஈடுபடுகிறார்.
ஒற்றை ஆதிக்கமே ஆர்எஸ்எஸ் நோக்கம்
ஒற்றையாட்சியாக இந்துத்துவ ராஜ்ஜியத்தை நிறுவுவது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் லட்சியம். அதை நோக்கி இந்தியாவை இழுத்துச் செல்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அர சாங்கம். ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் கோல்வால்கர், சிந்தனைக் கொத்து எனும் நூலில் (Bunch of Thoughts) இவ்வாறு குறிப்பிடுகிறார் : “நமது நாடு ஒரே நாடு. நாம் அனைவரும் ஒரே சமுதாயத்தினர். இது ஒரே ராஷ்ட்ரம். நமது வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் பண்புகள் ஒன்றாகவும் பொதுவாகவும் உள்ளன. உலகியல் முன்னேற்றங்கள் பற்றிய நமது ஆர்வங்களும் விருப்பங்களும் ஒன்றாக உள்ளன. இந்த நிலை யில் ஏகாத்ம முறையில் (Unitary-ஒற்றையாட்சி) அமைந்த ஒரு நாடு என்ற விதத்தில் இந்த நாட்டின் நிர்வாகம் நடத்திவரப்பட வேண்டும் என்பது இயல்பு. இன்றைய கூட்டாட்சி அமைப்பு, பிரி வினைப் போக்குகளை ஊட்டி வருகிறது. ஒரு விதத்தில் பார்த்தால், இன்றைய கூட்டாட்சி முறை நாம் ஒரே ராஷ்ட்ரம் என்ற சத்தியத்திற்கே முரணானது. கூட்டாட்சியின் அமைப்பே பிரி வினைப் போக்குள்ளதுதான். இந்தத் தவறைத் திருத்த வேண்டும். ஏகாத்ம அரசை நிலைநாட்டக் கூடிய விதத்தில் நமது நாட்டு அரசியல் சாச னத்தை மாற்றி அமைக்க வேண்டும்” என்று சங்பரிவாரத்தின் அரசியல் கட்சியான பாஜகவிற்கு வழிகாட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொண்ட லட்சியப் பாதையும் இதுவே. ஒரு நூறாண்டாக சங்பரிவாரங்கள் இந்தியா வில் முயற்சி செய்தன, அதன் அரசியல் கட்சி களான ஜனசங்கம், பாஜக முயற்சி செய்தது, குறிப்பாக கடந்த 9 ஆண்டுகளாக மோடி தலைமை யில் பாஜக, சங்பரிவாரங்கள் முயற்சி செய்து வரு வது எல்லாமே- கோல்வால்கரின் கனவை நன வாக்குவதற்காகவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் லட்சி யத்தை நிறைவேற்றுவதற்காகவும்தான். இந்தியா என்ற பன்முக நாட்டை ஒற்றையாட்சி, ஒற் றைக்கலாச்சாரம்,ஒற்றைமொழி கொண்ட இந்து ராஷ்டிரமாக்குவது என்பதுதான். இதுவே பாஜக வின் செயல்திட்டம். இந்தப் பாதையில்தான் மாநி லங்களின் அதிகாரங்களைப் பறித்து, கூட்டாட்சி முறையை சிதைக்க முயல்கிறது.
கார்ப்பரேட் பெருமுதலாளிகள் ஆதரிக்க காரணம்
நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு, நிர்வாக முறை, ஆட்சி முறை கொண்ட ஒற்றை ஆட்சி என்பது தங்குதடையற்ற, லாபகர மான, முழுமையான, சந்தையை கார்ப்பரேட்டு களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும். எனவே, அர சின் இத்தகைய ஒற்றைத்தன்மைதான் இன்றைய சர்வதேச நிதி மூலதனத்தால் இயக்கப்படுகிற நவீன தாராளவாத உலகமய முதலாளித்துவத்துக்குத் தேவையாக இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளி களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவே ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோட்பாட்டை அரங் கேற்றி வருகிறது.
கம்யூனிஸ்டுகள் காட்டிய வழி
பூரண சுதந்திரம் என்ற திசைவழியை இந்தியா விற்குக் காண்பித்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு தேசிய இனங்களின் சுரண்டலற்ற வாழ்வை உறுதி செய்யும் சோசலிச நாடாக இந்தியா மலர வேண் டும்; முழுமையான ஜனநாயகம் நோக்கி இந்தியா நடைபோட வேண்டும் என்பதற்காகப் போராடியது. மொழி வழி மாநிலங்கள் உருவாக்கத்தில் தீர்மான கரமான பங்காற்றி ஐக்கிய கேரளம், விசாலாந்திரா, சம்யுக்த மகாராஷ்டிரா உருவாக வழி செய்தது; தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்காகப் போரா டியது; காஷ்மீர், அஸ்ஸாம், பஞ்சாப், வட-கிழக்கு மாகாணங்களின் பிரச்சனைகளைக் கூரு ணர்வோடு அணுகி வழிகாட்டியது. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான போராட்டத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு அளப் பரியது. இன்னும் சொல்லப்போனால், சுதந்திர இந்தியாவில் பல்வேறு இன மற்றும் மொழி சார்ந்த மக்களின் ஒற்றுமையை மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதன்மூலமே நிரந்தரமாக உறுதி செய்ய முடியும் என்று வலுவாக முன்வைத்து ஆளும் அரசாங்கத்தை போராட்டங்கள் மூலம் ஏற்கச் செய்து அமலாக்கியது என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தனித்த சாதனையாகும்.
அதைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம அந்தஸ்தை வலியுறுத்தி யும், ஆட்சிமொழி, நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி என அங்கீகரிக்க வற்புறுத்தியும், தாய் மொழி வழிக் கல்வியே தனிச் சிறப்பு உடையது என்பதை முன்னிறுத்தியும் மொழி உரிமைகள் காக்க கம்யூனிஸ்ட் இயக்கம் உறுதியோடு போராடி வந்திருக்கிறது. சுரண்டலற்ற சமூகப் பொருளாதார மாற்றம் காண நூறாண்டுகளாகப் போராடி வரும் அனு பவமும்; சோஷலிச நாடல்லாத இந்தியாவில் தேர்த லில் பங்கேற்று கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைத்த அனுபவ மும் இணைந்த கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய அரசுகளின் மேலதிகாரத்தை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி, மாநில உரிமை களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கி றது. கூட்டாட்சி முறையை அதன் உண்மையான பொருளில் இந்தியாவில் உறுதிசெய்திட ஜன நாயக சக்திகளோடு இணைந்து தொடர்ந்து போராடி வருகிறது.
சிறைச்சாலையாக மாற்ற அனுமதியோம்!
இந்த நிலைமையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இடதுசாரி, மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள், கட்சிகள், பொது மக்கள் ஒன்றிணைந்து நாட்டைப் பாது காக்க வேண்டும். கூட்டாட்சி முறை தான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த அடிப்படையை நாம் பாதுகாத்திட வேண்டும். பல்வேறு மொழி கள் பேசும், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற் றும் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியா மாற்றப்படுவதை அனுமதிக்கக் கூடாது. மாநி லங்கள் என்பவை வெறும் நிர்வாக அமைப்பு அல்ல. மாறாக, இந்தியாவின் மாநிலங்கள் மொழி ரீதியாக, இன ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்க ளின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்தவை. எனவே மாநிலங்களின் உரிமை இந்திய கூட்டாட்சி யில் முதன்மையானது. அதை உரத்து முழங்குவோம்.