tamilnadu

img

பழைய ஓய்வூதியத்தை அனைவருக்கும் வழங்கிடுக!

ென்காசி ,ஜூன் 26  தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் நான்காவது மாநில மாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக பிளாஸ்டிக்கை ஒழிக்கிற  வகையில் அனைவரும் மஞ்சப்பையை பயன் படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை  ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழக அரசு நடைமுறைப்படுத்திய மஞ்சப்பை  இயக்கம் மாநாட்டில் முன்னெடுத்து வைக்கப்பட்டது. மாநாட்டு அரங்குக்கு வெளியில் மாநிலத் துணைத் தலைவர் கோ. தங்கவேல் தலைமையில் மாநிலச் செயலாளர் எஸ்.கனகராஜ் முன்னிலையில் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை அனைவருக்கும்  மஞ்சப்பை வழங்கி னார். பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ.தங்கவேல் தலைமை தாங்கினார். முன்னதாக அஞ்சலி தீர்மானம், கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.  வரவேற்புக் குழு தலைவர்  க.துரைசிங் அனைவரையும் வரவேற்றார். கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ். கனகராஜ் வேலை அறிக்கையை யும் மாநில பொருளாளர் டி. பால்முரு கன் வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். பிரதிநிதிகள் விவாதத்திற்கு பின் மாநில பொதுச் செயலாளர் எஸ். கனகராஜ் தொகுப்புரை ஆற்றினார்.  மாநாட்டில் சங்கத்தின் அமைப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநிலச் செயலாளர் டி. மகா லிங்கம் முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார்.  அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் என். வெங்கடேசன், மாநில துணைத் தலை வர் கிறிஸ்டோபர், நகராட்சி மாநக ராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.முருகானந்தம், சிவ கிரி பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளி ட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிர்வாகிகள் தேர்வு

தலைவராக கோ. தங்கவேல், மாநில பொதுச்செயலாளராக எஸ். கனகராஜ், பொருளாளராக டி. பால்முருகன் மற்றும் துணைப் பொதுச் செயலாளராக டி. மகாலிங்கம், துணைத் தலைவர்களாக உமாராணி, காலசாமி, அல்லா பிச்சை, மோசஸ் ஆன்றணி, முத்துராமலிங்கம், சம்பத் குமார், முருகேசன், மாநிலச் செய லாளர்களாக மகாலிங்கம், ஸ்ரீ ரவிக் குமார், அபுபக்கர், மீரா மைதீன், பால முருகன், பன்னீர்செல்வம், விஜய குமார், தணிக்கையாளராக மணிகண் டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சலவை பரிசு வழங்குதல், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பணிசெய்ய நிர்ப்பந்திக்கும் போக்கினை கைவிடு தல், பேரூராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் அரசு நிலையாக்கப் படாத பணியாளர்களின் ஓய்வூதிய கருத்துருவினை உள்ளாட்சி தணிக்கை துறையினர் விரைந்து பரிசீலித்து காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்கு தல், பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் கரு வூலம் மூலம் ஊதியம் வழங்குதல், பேரூராட்சிகளில் பணிபுரியும் செயல் அலுவலர் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்கள் மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது  இறுதி ஆணை பிறப்பித்து பணி யாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கு தல் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   வரவேற்புக்குழு செயலாளர் அல்லாபிச்சை, பொருளாளர் இசக்கி முத்து மற்றும் திருநெல்வேலி மாவட்ட  செயலாளர் ஆறுமுகம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தென்காசி மாவட்ட செயலாளர் மாட சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

;