தல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
சேலம், ஆக.26- 2025 ஆம் ஆண்டிற்கான சேலம் மாவட்ட அளவிலான முதலமைச் சர் கோப்பை விளையாட்டுப் போட் டிகள் செவ்வாயன்று துவக்கி வைக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான சேலம் மாவட்ட அளவிலான முதலமைச் சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் செவ் வாயன்று துவக்கி வைத்தார். மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்த னர். அப்போது அமைச்சர் ராஜேந்தி ரன் பேசுகையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி கள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனா ளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபடி, மண்டல அளவிலான கடற் கரைப் கையுந்துப்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டி கள் நடத்தப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகளுக்கு சேலம் மாவட்டத் தில் பள்ளிகள் பிரிவில் 35,996 நபர் களும், கல்லூரி பிரிவில் 7,633 நபர்க ளும், மாற்றுத்திறனாளிகள் பிரி வில் 2,165 நபர்களும், அரசு ஊழி யர்கள் பிரிவில் 1,625 நபர்களும், பொதுப்பிரிவில் 6,738 நபர்களும் என மொத்தம் 54,157 நபர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப் பித்து பங்கேற்கின்றனர். செப்.12 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறள்ளது. கடந்தாண்டு, மாநில அளவில் சேலம் மாவட்ட 4 வது இடத்தை பிடித்துள்ளது, என் றார். இதில் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சி.சிவரஞ் சன், மாமன்ற உறுப்பினர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனை கள் கலந்து கொண்டனர்.